Don't Miss!
- Lifestyle
ருசியான... சோயா பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
அனுமதி கிடைச்சாச்சு! பஜாஜின் விலை குறைவான காரை இனி தனி நபர்களும் வாங்கிக்கலாம்! மாருதிக்கு பலத்த அடி விழபோகுது
- Sports
உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் நான் தான்.. விராட் கோலிலாம் எனக்கு பின்னாடி தான்.. பாக். வீரர் பேட்டி
- News
ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இணைந்த முன்னணி தமிழ் எழுத்தாளர்.. 2015 சர்ச்சை ஞாபகம் இருக்கா?
- Finance
FII வெளியேற்றம், பட்ஜெட் 2023, பொருளாதார அச்சம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிவு!
- Technology
நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
திறமைதான் முக்கியம்..அதெல்லாம் விஷயமே இல்லை..போல்டாக பேசிய ஸ்ருதி ஹாசன்!
சென்னை: தமிழில் உச்ச நட்சத்திரமாக கலக்கி வரும் கமல்ஹாசனின் மூத்த வாரிசான ஸ்ருதிஹாசனும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அறிமுகமானபோது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதிஹாசனுக்கு சரியான படங்கள் அமையவில்லை.
அதேநேரம் தெலுங்கு, இந்தியிலும் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஸ்ருதி.
இந்நிலையில், வரும் பொங்கலுக்கு அவர் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் தெலுங்கில் வெளியாகவுள்ளன.
போட்ட திட்டமெல்லாம் பாழாய் போச்சு.. இயக்குநர் மீது செம டென்ஷனான மாஸ் நடிகர்.. அப்போ அது வராதா?

திரையுலகில் வாரிசு நடிகை
இந்திய சினிமாவின் உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பத்தாண்டுகளுக்கு முன்னரே திரையுலகில் நடிகையாகவும் பாடகியாகவும் அறிமுகமான ஸ்ருதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது ஒல்லியான உடல்வாகும் கொஞ்சம் தாராள மனதும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது. சூர்யாவுடன் 7ம் அறிவு, தனுஷுடன் 3 ஆகிய படங்கள் ஸ்ருதிஹாசனுக்கு நல்ல கம்பேக் கொடுத்தது. இதனால் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சீனியர் நடிகர்களுடன் ஜோடி
தொடர்ந்து விஷால் - ஹரி கூட்டணியில் உருவான பூஜை, விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். அதேபோல் தெலுங்கிலும் இளம் ஹீரோக்களுடன் நடித்து மாஸ் காட்டினார். இதனிடையே இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ள ஸ்ருதிஹாசனுக்கு சில வருடங்களாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. கடைசியாக தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்த லாபம் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வரும் பொங்கலுக்கு சீனியர் நடிகர்களுடன் ஸ்ருதி ஜோடியாக நடித்த இரண்டு திரைப்படங்கள் ரிலீஸாகின்றன.

நெட்டிசன்கள் ட்ரோல்
டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள வால்டேர் வீரய்யா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல், வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இருவருமே தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருந்தாலும், 60 வயதை கடந்த சீனியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தனது அப்பா வயதுடைய நடிகர்களுடன் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கிறாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.

போல்டாக பேசிய ஸ்ருதி
இந்நிலையில், ஸ்ருதிஹாசனிடம் வயதான நடிகர்களுடன் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர், "நடிப்பு துறையில் வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் உயிரோடு இருக்கும் வரை நடிக்கலாம். இதை ஏற்கனவே பல வயதான ஹீரோக்கள் தங்களை விட இரண்டு மடங்கு வயது குறைவான இளம் நாயகிகளுடன் நடித்து நிரூபித்துள்ளனர். அதனால் இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல" என்று மிக தைரியமாக கூறியுள்ளார். ஸ்ருதியின் இந்த பதில் ட்ரோலர்களுக்கு செம்ம பதிலடியாக அமைந்துள்ளது.