Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன்..என் உடல் எது வேண்டுமானாலும் செய்வேன்..ஸ்ருதிஹாசன் நச் பதில்!
சென்னை : மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக்கொண்டதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன், அப்பா கமலின் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து, 2009ம் ஆண்டு லக் எனும் இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதி, தமிழில் 2011ம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7ஆம் அறிவு படத்தில் நடித்திருந்தார்.
கல்யாணத்தை
நினைச்சாலே
கை,
கால்
எல்லாம்
நடுங்குது..
என்ன
ஸ்ருதிஹாசன்
காதலர்
இப்படி
சொல்லிட்டாரு?

முதல் காதல் கசந்தது
முதல் படத்திலேயே புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்து விட்டார் ஸ்ருதி. முதல் படமே சூப்பர் டூபர் ஹிட்டடித்து முன்னணி நடிகை லிஸ்டில் இணைந்த ஸ்ருதி,தமிழ்,தெலுங்கு, இந்தி என வரிசையாக பல மொழிப்படங்களில் நடித்து வந்தார். முன்னதாக மைக்கேல் கார்சலேவை ஸ்ருதிஹாசன் காதலித்து வந்த நிலையில், இருவரும் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில்
இதனால், மன அழுத்தத்தில் இருந்த ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருகிறார். காதலருக்காக மும்பையிலேயே செட்டினான ஸ்ருதி அவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் படு நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு டிரெண்டாகி வருகின்றனர்.

மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன்
இந்நிலையில், உடல் அழகு குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன், என்னுடைய மூக்கு உடைத்து, சற்று வித்தியாசமாக இருந்ததால், நான் எனது மூக்கைஅறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொண்டேன். எனது முகத்தை என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய உரிமை எனக்கு இருக்கிறது. ஒவ்வொரு நபருக்கும், அவர்களது உடலில் மாற்றங்களை செய்யக் கூடிய உரிமை உள்ளது. இதற்காக நான் அழகு கலை பொருட்களைப் பயன்படுத்துகிறேன் என்று அர்த்தம் கிடையாது.

ஆசைபடுவதை செய்யுங்கள்
நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அதை செய்யுங்கள். செய்ய விரும்பவில்லையா? அதனை செய்யாதீர்கள். அது உங்களுடைய விருப்பம். ஸ்ருதி ஹாசன் நடிகை போல இல்லை என்று முன்பு என்னை கிண்டல் செய்தார்கள். ஸ்ருதிஹாசன் நல்ல திறமை உள்ளவர் தான் ஆனால் அவர் இந்தியரை போன்று தோற்றம் அளிக்கவில்லை என்கிறார்கள். அதே நேரத்தில் நான் நடித்த பெரும்பாலான படங்களில், நான் கிராமத்து ஹீரோயின் கேரக்டரில் தான் நடித்து இருக்கிறேன். ஆக மொத்தம் நம்மை பற்றி ஏதாவது என்று பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் என்றார்.