»   »  ஸ்ருதி ஜோடியாம்... சிவகார்த்திகேயனை 'அடித்த' கமல் ரசிகர்கள் கை இனி 'அணைக்குமா'?

ஸ்ருதி ஜோடியாம்... சிவகார்த்திகேயனை 'அடித்த' கமல் ரசிகர்கள் கை இனி 'அணைக்குமா'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ஸ்ருதி ஹாஸனின் உடை பற்றி கமெண்ட் அடித்தார் நடிகர் சிவகார்த்திகேயன் என்று கூறி, கமலின் ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் சிவகார்த்திகேயனைத் தாக்கியது நினைவிருக்கலாம்.

இது பற்றி சிவகார்த்திகேயனிடம் ரஜினி கூட விசாரித்து ஆறுதல் கூறினார் என்றெல்லாம் செய்தி வெளியாகின.

Shruti to pair up with Sivakarthikeyan

இப்போது ஒரு யு டர்ன் செய்தி..

எந்த ஸ்ருதி ஹாஸனுக்காக சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் தாக்கினார்களோ... அந்த ஸ்ருதி ஹாஸன் இப்போது அதே சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்கிறார். இத்தனைக்கும் சிவா கேட்காமலேயே தன் இசைவை அவருக்குத் தெரிவித்தவர் சாட்சாத் ஸ்ருதியேதானாம்!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாகும் புதிய படத்தில்தான் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கப் போகிறார் ஸ்ருதி ஹாஸன்.

விஷயம் அறிந்த கமல் ரசிகர்களுக்கு செம ஷாக்காம்.

அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற பழமொழிதான் இருக்கே. அப்படியே முணுமுணுத்தபடி, சிவகார்த்தி - ஸ்ருதி கட்அவுட்டுக்கு மாலைபோட தயாராகுங்க பாஸ்!

English summary
According to our reliable sources, Kamal's daughter Shruthi Hassan is going to pair up with Sivakarthikeyan. Remember, some of Kamal fans turned against Siva for his comments about Shruti and hitted him at Madurai airport.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil