»   »  லண்டனில் இருந்து மும்பை வந்த காதலர்: ஸ்ருதிக்கு விரைவில் திருமணம்?

லண்டனில் இருந்து மும்பை வந்த காதலர்: ஸ்ருதிக்கு விரைவில் திருமணம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்ருதி ஹாஸனை பார்க்க அவரது காதலர் மைக்கேல் கார்சேல் லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாஸனும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்படுகிறது. காதலர் தினத்தை ஸ்ருதியுடன் கொண்டாட மைக்கேல் மும்பை வந்திருந்தார்.

சங்கமித்ரா படத்தை விளம்பரப்படுத்த கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றபோது ஸ்ருதி மைக்கேலை சந்தித்தார்.

மைக்கேல்

மைக்கேல்

ஸ்ருதியுடன் நேரம் செலவிட மைக்கேல் மும்பைக்கு வந்துள்ளார். அவரை வரவேற்க ஸ்ருதி மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். மைக்கேலை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து வரவேற்றார்.

பிசி

பிசி

ஸ்ருதி ரொம்ப பிசியாக இருப்பதால் அவரால் லண்டன் செல்ல முடியவில்லை. இதையடுத்து அவரை சந்திக்க மைக்கேல் மும்பைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்

கமல்

மைக்கேல் ஸ்ருதியுடன் சென்னை வந்து உலக நாயகன் கமல் ஹாஸனை சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது. மைக்கேல் ஏற்கனவே கமலை சந்தித்து பேசியுள்ளார்.

திருமணம்

திருமணம்

ஸ்ருதியும், மைக்கேலும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மைக்கேல் கமல் ஹாஸனை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

English summary
Actress Shruti Haasan's alleged boyfriend Michael Corsale has come to Mumbai to spend quality time with her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil