காதலருக்கு பிறந்தநாள்: உடன் இருக்க முடியலேயேன்னு ஃபீல் பண்ணிய ஸ்ருதி
Recommended Video

சென்னை: ஸ்ருதி ஹாஸன் தனது காதலர் மைக்கேலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாஸனும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது. ஸ்ருதியை பார்க்க மைக்கேல் இந்தியா வருவதும், அவரை பார்க்க ஸ்ருதி லண்டனம் செல்வதுமாக உள்ளனர்.
ஆதவ் கண்ணதாசனின் திருமண நிகழ்ச்சியில் மைக்கேல் பட்டு வேட்டி சட்டை அணிந்து ஸ்ருதியுடன் ஜோடியாக கலந்து கொண்டார்.
பிறந்தநாள்
மைக்கேல் கார்சேல் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் அவருடன் இருக்க முடியவில்லையே என்று வருத்தத்துடன் ஸ்ருதி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காதலர்
ஸ்ருதியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மைக்கேலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் மைக்கேல் ஸ்ருதியின் காதலர் என்பது புரிகிறது என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

எதிர்பார்ப்பு
ஸ்ருதி ஹாஸனும், மைக்கேலும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் ஹாஸனும் சரி, சரிகாவும் சரி மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.

சினிமா
ஸ்ருதி திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இருப்பதால் தான் புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அவரிடம் கேட்டால் இது என் தனிப்பட்ட விஷயம் என்கிறார்.


Click it and Unblock the Notifications











