»   »  அசிங்கப்பட்டார் 'மருத்துவ முத்தம்' ஆரவ்: காரணம் பிக் பாஸ்

அசிங்கப்பட்டார் 'மருத்துவ முத்தம்' ஆரவ்: காரணம் பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷட்அப் பண்ணுங்க பாடல் மூலம் ஆரவ் அசிங்கப்பட்டுள்ளார்.

பலூன் படத்தை விளம்பரம் செய்ய பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார் அஞ்சலி. பலூன் படத்தில் நடித்த ஜெய்யோ குடிபோதையில் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

அஞ்சலியை பார்த்த போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

பிக் பாஸ் போட்டியாளர்களுடன் சிரித்து பேசிய அஞ்சலி பிந்து மாதவியை பார்த்து டாஸ்க் கொடுத்தால் ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டார்.

அஞ்சலி

அஞ்சலி

நான் எப்ப சொன்னேன். வெறும் இரண்டு டாஸ்க்குக்கு மட்டும் தான் முடியாது என்றேன் என பிந்து மாதவி அஞ்சலியிடம் கூறினார். மற்ற அனைத்து டாஸ்க்குளையும் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் பிந்து.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வித்தியாசமானவர்களாக உள்ளனர். யாராலும் ரொம்ப நடிக்க முடியாது. தற்போது அவரவரின் உண்மையான குணம் வெளிப்படுகிறது என்று அஞ்சலி பிக் பாஸிடம் தெரிவித்தார்.

பாடல்

பாடல்

அஞ்சலி ஷட்அப் பண்ணுங்க பாடலுக்கு போட்டியாளர்களுடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்று பிக் பாஸ் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் ஆடினார்கள்.

ஆரவ்

ஆரவ்

அனைவரும் ஆடி முடித்த பிறகு ஷட்அப் பண்ணுங்க என்று பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா கூறியதை வைத்தே இந்த பாடலை உருவாக்கினார்கள் என்று அஞ்சலி கூறியதும் ஆரவுக்கு ஷாக்காக இருந்தது.

English summary
Aarav was shocked to hear from Anjali about the origin of Shut-up Pannunga song.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil