»   »  சி3 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை கோரிய ஞானவேல்ராஜா மனு தள்ளுபடி

சி3 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை கோரிய ஞானவேல்ராஜா மனு தள்ளுபடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம் 3 படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியான அன்றே அதை லைவ் ஸ்ட்ரீமில் வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சவால் விட்டுள்ளது.


Si3 case: Chennai HC dismisses Gnanavel Raja's plea

இந்நிலையில் ஞானவேல் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது,


சிங்கம் 3 படத்தை சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 173 இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என அவர் அதில் தெரிவித்திருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா இது நீதிப்பேராண்மை வழக்காக விசாரிக்க ஏற்றது இல்லை என்றார். மேலும் இதை உரிமையியல் வழக்காக தொடரலாம் என்றும் அவர் கூறினார்.


இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக ஞானவேல் ராஜா தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

English summary
Chennai high court has dismissed producer Gnanevel Raja's plea seeking ban on websites to release Suriya's movie Si3 that is hitting the screens on february 9th.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil