»   »  சூர்யாவின் சி 3 படத்தை அனுமதியின்றி இணையத்தில் வெளியிடக் கூடாது! - உயர் நீதிமன்றம்

சூர்யாவின் சி 3 படத்தை அனுமதியின்றி இணையத்தில் வெளியிடக் கூடாது! - உயர் நீதிமன்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் சி3 திரைப்படத்தை, அதன் தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.


 Si3 case: HC orders against websites

வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரமம், சூர்யாவின் சி3 திரைப்படத்தை எந்த ஒரு இணைய தளத்திலும் யாரும் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் வெளியிட கூடாது என உத்தரவிட்டார்.


இதற்க்கு முன் இதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்துக்கும் இதே மாதிரி உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது நினைவிருக்கலாம்.


சி 3 நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
The Madras High Court has ordered websites not to release Singam 3 without producer's concern.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil