»   »  சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தின் டைரக்டர் இவர்தான்.. தயாரிப்பது யார் தெரியுமா?

சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தின் டைரக்டர் இவர்தான்.. தயாரிப்பது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிபிராஜ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவான 'சத்யா'. இந்தப் படத்தில் சீரியஸான ரோலில் நடித்த சிபிராஜின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

இந்தப் படத்திற்குப் பிறகு, புதுமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில் 'ரங்கா' எனும் படத்தில் நிகிலா விமலுடன் நடித்து வருகிறார் சிபிராஜ். இதையடுத்து சிபிராஜ் நடிக்கவிருக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sibiraj doing his next film with this director

'மதுபானக்கடை' படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிபிராஜ். 'மதுபானக்கடை' பொலிட்டிகல் சட்டையர் படமாக வெளிவந்தது. கமலக்கண்ணனின் அடுத்த படம் கமர்ஷியல் படமாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கி சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Sibiraj to act in 'Madhubanakkadai' director Kamalakannan's film. Dream warrior pictures going to be produce this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X