»   »  சத்யராஜ் மகன் படத்துக்கு ரஜினிகாந்த் படத் தலைப்பு!!

சத்யராஜ் மகன் படத்துக்கு ரஜினிகாந்த் படத் தலைப்பு!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எழுபதுகளின் இறுதியிலிருந்து நடித்து வரும் சத்யராஜுக்கு வெளிச்சம் தந்து ரஜினியின் மூன்று முகம் படம். அதைத் தொடர்ந்து பல ரஜினி படங்களில் நடித்தவருக்கு, மிஸ்டர் பாரத் படத்தில் தனக்கு சமமான, சில காட்சிகளில் தன்னையே டாமினேட் செய்யும் வேடத்தைக் கொடுத்தார் ரஜினி. அதன் பிறகுதான் சத்யராஜ் மார்க்கெட் விர்ரென்று போனது.. தனி ஹீரோவாக வெற்றியும் பெற்றார்.

ஆனால் அதே சத்யராஜ், சில ஆண்டுகள் கழித்து ரஜினியைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக காவிரிப் பிரச்சினை போராட்டங்களின்போது.

Sibiraj pics up Rajini movie title

இப்போது அதே சத்யராஜின் மகன் நடிக்கும் ஒரு படத்துக்கு ரஜினிகாந்த் வெற்றிப் படத் தலைப்பைச் சூட்டியுள்ளனர். அது 'ரங்கா'.

சினிமாவில் இன்னும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடிக் கொண்டிருக்கும் சிபிராஜ், இப்படியாவது தேறிவிடமாட்டாரா என்பதற்காக இந்தத் தலைப்பைச் சூட்டியிருப்பார்கள் போலிருக்கிறது.

ரங்கா படம் வெளியானது 1982-ல். தேவர் பிலிம்ஸுக்காக ரஜினி நடித்த இந்தப் படம் அன்றைக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அவசர அடி ரங்கா எனும் ரங்கநாதனாக வரும் ரஜினியின் ஸ்டைலுக்கு அவ்வளவு பேரும் ரசிகர்களானார்கள்.
இன்றும் தொலைக்காட்சிகளில் ரசித்துப் பார்க்கப்படும் படமாக உள்ளது.

இப்போது சிபிராஜ் நடிப்பில் உருவாகும் ரங்கா படத்தை பாஸ் ஃபிலிம்ஸ் விஜய் கே.செல்லையா தயாரிக்க, வி.இசட்.துரையின் உதவியாளர் வினோத் இயக்குகிறார்.

சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் அர்வி, எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் ராம்ஜீவன், ஸ்டண்ட் திலீப் சுப்பராயன், காஸ்ட்யூம் சத்யா, டிசைனர் ட்யூனி ஜான், டான்ஸ் மாஸ்டர் விஜி என முழுக்க இளைஞர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

English summary
Sathyaraj's son Sibiraj's new movie has been titled as Rajinikanth's 80's hit movie Ranga.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil