»   »  'பாகுபலி' கட்டப்பாவாக மாறும் சிபிராஜ்!

'பாகுபலி' கட்டப்பாவாக மாறும் சிபிராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்துக்கு கட்டப்பாவை காணோம் என்று பெயர் வைத்துள்ளனர்.

போக்கிரி ராஜா படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் நடிப்பில் ஜாக்சன் துரை படம் வெளியாகவிருக்கிறது. போலீஸ் அதிகாரியாக சிபிராஜும், பேய் வேடத்தில் சத்யராஜும் இதில் நடித்துள்ளனர்.

Sibiraj's Next movie Title

தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படத்தில் சிபிராஜுடன் இணைந்து பிந்து மாதவி, கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் சிபிராஜ் நடிக்கும் புதிய படத்திற்கு கட்டப்பாவை காணோம் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் சிபிராஜ் நடிக்கிறார்.

மணி என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் வெளியாகி இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பாகுபலி படத்தில் சிபிராஜின் அப்பா சத்யராஜ் கட்டப்பாவாக நடித்திருந்தார்.

பாகுபலி வெளியானதில் இருந்து கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்ற கேள்விக்கு விடை தேடி ரசிகர்கள் அலுத்துப்போய் விட்டனர்.

இதற்கான பதில் 2 வது பாகத்தில் தான் தெரியவரும் என்பதால் பாகுபலி 2வுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் சிபிராஜ் கட்டப்பாவை காணோம் என்று பெயர் வைத்ததன் மூலம் தலைப்பிலேயே ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.

English summary
Sources said Sibiraj Play Kattappa role in his Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil