»   »  ஒளிப்பதிவாளர் சங்கத்தில் ரூ 60 லட்சம் ஊழல்... பெப்சி சிவா மீது போலீசில் புகார்!

ஒளிப்பதிவாளர் சங்கத்தில் ரூ 60 லட்சம் ஊழல்... பெப்சி சிவா மீது போலீசில் புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (SICA) தலைவர் பிசி ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள், சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் ஊழல் முறைகேடு புகார் அளித்தனர்.

இன்று கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த சங்கத்தின் தலைவர் பிசி ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் சொல்லப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள்:

SICA President PC Sriram lodges complaint on former functionaries

* 2008 முதல் 2014 வரைக்குமான கணக்குகளை சரியாக ஒப்படைக்கவில்லை

* மலேசியாவில் நடந்த 2015 ஆம் ஆண்டுக்கான SICA விருது நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கணக்குகளில், பல லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது.

* அது சம்பந்தமாக பலமுறை, கணக்குகளை கேட்டும், தராமல் இருந்தது.

SICA President PC Sriram lodges complaint on former functionaries

* இதனால் விருது நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு உரிமம் பெற்ற சன் TV-வின TDS பணமான 37.5 லட்சத்தை திரும்ப பெற முடியாத நிலை இருக்கிறது.

* சாலிகிராமத்தில் நில மதிப்புக்கு மீறி 1.25 கோடி ரூபாயை முன் பணமாக செலுத்தி, மேலும் 80 லட்சம் ரூபாய் அந்த நிலத்திற்கு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து, SICA சங்கத்திற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பையும், பாரம்பரியமிக்க இச்சங்கத்திற்கு அவப் பெயரை ஜி சிவா (முன்னால் பொது செயலாளர்) அவர்கள் ஏற்படுத்தி விட்டார்.

* 8 வருடமாக முறையாக வருமான வரி செலுத்தாதனால், 80G பெற முடியாவில்லை, அதனால், சங்கத்திற்கு வரவேண்டிய நன்கொடைகள் பெற முடியாத நிலை இருக்கிறது, அதனால் மூத்த உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித் தொகை மற்றும் உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியாமல் இருக்கிறது.

English summary
SICA President PC Sriram has lodged corruption complaint on former functionaries including G Siva

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil