»   »  பெங்களூர் டேஸ் தெலுங்கு ரீமேக்கில் இருந்து விலகிய சித்து, சமந்தா

பெங்களூர் டேஸ் தெலுங்கு ரீமேக்கில் இருந்து விலகிய சித்து, சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் டேஸ் தெலுங்கு ரீமேக்கில் இருந்து சித்தார்த்தும், சமந்தாவும் விலகியுள்ளனர்.

சித்தார்த்தும், சமந்தாவும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதலை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் ஜோடியாக வலம் வந்தனர். இந்நிலையில் சமந்தா அதிரடியாக ஓவர் கவர்ச்சி காட்டி நடிக்கத் துவங்கினார். இதனால் காதல் ஜோடிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

பிரச்சனை பெரிதாகி இருவரும் பிரிந்துவிட்டனர்.

நாகரீகம்

நாகரீகம்

காதல் முறிந்த பிறகு சித்தார்த் சமந்தாவை பற்றியோ சமந்தா சித்தார்த்தை பற்றியோ தவறாக எதுவும் பேசாமல் நாகரீகமாக நடந்து கொண்டனர்.

தெலுங்கு படம்

தெலுங்கு படம்

மலையாள படமான பெங்களூர் டேஸின் தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த், சமந்தா நடிக்க உள்ளனர் என்று செய்திகள் வெளியாகியது. காதல் முறிந்தாலும் இந்த படத்தில் அவர்கள் சேர்ந்து பணியாற்ற உள்ளனர் என்று கூறப்பட்டது.

சித்தார்த்

சித்தார்த்

பெங்களூர் டேஸ் படத்தில் நான் நடிக்கவில்லை. 2015ம் ஆண்டுக்கான என் திட்டம் பற்றி விரைவில் அறிவிப்பேன். தற்போது எனக்குள் ஒருவனுக்காக காத்திருக்கிறேன் என்று சித்தார்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சமந்தா

சமந்தா

நான் பெங்களூர் டேஸ் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவில்லை என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சமந்தா ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

English summary
Former love birds Siddharth and Samantha have pulled out of the telugu remake of Bangalore days post break-up.
Please Wait while comments are loading...