»   »  கங்கனாவிற்கு சப்போர்ட் செய்து... கணவரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட வித்யாபாலன்

கங்கனாவிற்கு சப்போர்ட் செய்து... கணவரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட வித்யாபாலன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கங்கனாவிற்கு ஆதரவு தெரிவித்து கணவரின் கடும்கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார் நடிகை வித்யாபாலன்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் வித்யாபாலன் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், கங்கனா ரனாவத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

இதனால் வித்யா பாலனுக்கும் அவரது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹிருத்திக்ரோஷன்

ஹிருத்திக்ரோஷன்

ஹிருத்திக்ரோஷன்- கங்கனா ரனாவத் இடையிலான சண்டை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த விவகாரத்தில் ஒருவருக்கு மற்றவர் வக்கீல் நோட்டிஸ் அனுப்பி பிரச்சினையை மேலும் பெரிதாக்கிக் கொண்டுள்ளனர். ஊடகங்கள் மத்தியில் கூட ஒருவரைப் பற்றி மற்றவர் குறை சொல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர்.

மவுனம்

மவுனம்

இவர்கள் இருவரின் சண்டையை பாலிவுட் உலகம் மவுனமாக வேடிக்கை பார்த்து வருகிறது. போப் ஆண்டவர் பற்றிய சர்ச்சை கருத்து, கங்கனா மன நோயாளி என இது தொடர்பாக கருத்துத் தெரிவித்து ஹிருத்திக்ரோஷன் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

வித்யாபாலன்

வித்யாபாலன்

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் நடிகை வித்யாபாலன் கங்கனா ரனாவத்தை நான் ஆதரிக்கிறேன் என்று கூறினார். இதுகுறித்து அவர் ''கணவர், குழந்தைகள், குடும்பம் போன்றவற்றிற்காக போராடும் பெண்கள் வெகு அரிதாகத் தான் தங்களுக்காக போராடுகின்றனர். அதற்காக நான் அவளைப் பாராட்டுகிறேன்'' என்று கூறினார்.

சித்தார்த் ராய் கபூர்

சித்தார்த் ராய் கபூர்

வித்யாபாலனின் இந்தக் கருத்து அவரது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிருத்திக்ரோஷன் அடுத்து நடிக்கவிருக்கும் 'கபில்' படத்தை சித்தார்த் ராய் கபூரின் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நேரத்தில் வித்யாபாலன் கங்கனாவிற்கு ஆதரவு
தெரிவித்திருப்பது தான் சித்தார்த்தின் அதிருப்திக்கு காரணமாம்.

சித்தார்த் ராய் கபூர்

சித்தார்த் ராய் கபூர்

வித்யாபாலனின் இந்தக் கருத்து அவரது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிருத்திக்ரோஷன் அடுத்து நடிக்கவிருக்கும் 'கபில்' படத்தை சித்தார்த் ராய் கபூரின் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நேரத்தில் வித்யாபாலன் கங்கனாவிற்கு ஆதரவு
தெரிவித்திருப்பது தான் சித்தார்த்தின் அதிருப்திக்கு காரணமாம்.

English summary
Siddarth Roy Kapur Upset with Vidya Balan's Statement Regarding Hrithik Roshan - Kangana Ranaut Issue.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil