»   »  என்னது 'அறம் 2' படத்தில் நயன்தாரா இல்லையா?: உண்மை என்ன?

என்னது 'அறம் 2' படத்தில் நயன்தாரா இல்லையா?: உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அறம் 2 படத்தில் சித்தார்த் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் ஹிட்டானது. இந்த படம் நயன்தாராவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

இதையடுத்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கோபி நயினார் முடிவு செய்துள்ளார்.

சித்தார்த்

சித்தார்த்

நயன்தாரா பிற படங்களில் பிசியாக இருப்பதால் கோபி நயினார் சித்தார்த்தை வைத்து அறம் 2 படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

கோபி

கோபி

சித்தார்த்தை வைத்து கோபி நயினார் படம் எடுப்பது உண்மை தான். ஆனால் அது அறம் 2 இல்லை. முற்றிலும் வேறு கதை. இது குறித்த தகவல்களை கோபி நயினாரே விரைவில் வெளியிட உள்ளார்.

படம்

படம்

அறம் 2 படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத துவக்கத்தில் துவங்கும். அதுவரை சும்மா இல்லாமல் வேறு ஒரு படம் பண்ணலாமே என்று சித்தார்த்தை அணுகினேன் என்றார் கோபி நயினார்.

அரசியல் பிரச்சனை

அரசியல் பிரச்சனை

அறம் 2 படத்திலும் நயன்தாரா மதிவதனியாக வந்து அதிரடி நடவடிக்கைகள் எடுப்பாராம். அறம் 2 படத்தில் அரசியல் பிரச்சனைகள் குறித்து காண்பிக்கப்படும் என்று கோபி நயினார் தெரிவித்தார்.

English summary
Siddharth is going to act in Gopi Nainar's movie but it is not the sequel of the superhit movie Aramm starring Nayanthara. Gopi Nainar is definitely making a sequel of Aramm with Naynathara only.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X