»   »  ஜில் ஜங் ஜக் முழுக்க, முழுக்க ஆண்களுக்கான படம் - இயக்குநர் தீரஜ் வைத்தி

ஜில் ஜங் ஜக் முழுக்க, முழுக்க ஆண்களுக்கான படம் - இயக்குநர் தீரஜ் வைத்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜில் ஜங் ஜக் முழுக்க, முழுக்க ஆண்களுக்கான படம் என்று அப்படத்தின் இயக்குநர் தீரஜ் வைத்தி தெரிவித்திருக்கிறார்.

சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜில் ஜங் ஜக் அறிமுக இயக்குநர் தீரஜ் வைத்தி இயக்கி வரும் இப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து அவினாஷ் ரகுவரன், நாசர், ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Siddharth's Jil Jung Jak

இப்படத்தின் இயக்குநர் தீரஜ் வைத்தி படம் குறித்து கூறும்போது ஜில் ஜங் ஜக் முழுக்க, முழுக்க ஆண்களுக்கான படம். படத்தில் கதாநாயகி மட்டுமின்றி பெண் கதாபாத்திரங்களை கூட நீங்கள் காண முடியாது.

படம் முழுவதும் ஆண் கதாபாத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கிறது. மேலும் படம் முழுவதையும் கற்பனை கதாபாத்திரங்களை வைத்தே அமைத்திருக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் சித்தார்த்தின் 25 வது படமாக உருவாகி வரும் ஜில் ஜங் ஜக்கின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும், ஷூட் தி குருவி பாடலை நடிகர் சல்மான் கானும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்தின் ஜில் ஜங் ஜக் முழுவதும் ஆண்களின் ராஜ்ஜியம் தான் போல!

    English summary
    Siddharth's 25 th Film Jil Jung Jak Director Dheeraj Vaidy Says "Jil Jung Jak The Whole Movie is Men's Only".

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil