»   »  கமர்ஷியல் படம்னா இந்தப் பத்து விஷயம் இருக்கணும்... சித்தார்த்தைக் கலாய்க்கும் சிறுவன்

கமர்ஷியல் படம்னா இந்தப் பத்து விஷயம் இருக்கணும்... சித்தார்த்தைக் கலாய்க்கும் சிறுவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது நடிப்பில் உருவாகியிருக்கும் ஜில் ஜங் ஜக் திரைப்படத்தின் புதுவித புரோமோஷன் ஒன்றை நடிகர் சித்தார்த் வீடியோ வடிவில் வெளியிட்டிருக்கிறார்.

அதில் ஒரு சிறுவன் சித்தார்த்தின் ஜில் ஜங் ஜக் கமர்ஷியல் படமா? என்று கேட்க அதற்கு அவர் இயக்குநர் தீரஜ் வைத்திக்கு போன் செய்து இது கமர்ஷியல் படம் தான் என்று கூறுகிறார்.

ஆனால் அந்த சிறுவன் மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், பேய் இதெல்லாம் இல்லாம ஒரு கமர்ஷியல் படமா? என்று கலாய்க்க செய்கிறான்.

ஜில் ஜங் ஜக்

ஜில் ஜங் ஜக்

சித்தார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜில் ஜங் ஜக் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 12 ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி ஒரு புரோமோஷன் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் ஒரு சிறுவன் ஜில் ஜங் ஜக் கமர்ஷியல் படமா? என்று கேட்டு கமர்ஷியல் படம் பற்றி சித்தார்த்துக்கு விளக்கம் கொடுக்கிறான். இணையத்தில் பலரையும் கவர்ந்த அந்த வீடியோ குறித்து இங்கே பார்க்கலாம்.

சந்தானம், பரோட்டா சூரி

சந்தானம், பரோட்டா சூரி

உங்க படத்துல சந்தானம், பரோட்டா சூரி இருக்காங்களா என்று சிறுவன் கேட்க அதற்கு சித்தார்த் இல்லை என்று கூறுகிறார். சரி ஹீரோவும், காமெடியனும் சேர்ந்து கம்பெனி திறப்பாங்களா என்று கேட்க அதற்கும் சித்தார்த் இல்லை என்றே கூறுகிறார்.

தம்பி ராமையா

தம்பி ராமையா

தம்பி ராமையாவோட மைன்ட் வாய்ஸ், சமுத்திரக்கனி அட்வைஸ் இதெல்லாம் இல்லையா அப்போ படம் ஓடுறதுக்கு வாய்ப்பே இல்லை என்று சித்தார்த்தை பதட்டப்பட வைக்கிறான்.

தல தலன்னு

தல தலன்னு

சரி படத்துல அடிக்கடி தல, தலன்னு பேர் சொல்வீங்களா அப்பத்தான் ஆடியன்ஸ் கைதட்டல் கிடைக்கும். ஒரு பாட்டுல என்று இழுக்கும் சித்தார்த் பிரதர் அது 2020 ல நடக்கும் என்று பதில் கூறுகிறார். ஆனால் அப்போ அவர் சிஎம் ஆகிடுவாரு என்று சித்தார்த்துக்கு மீண்டும் சிறுவன் பல்பு கொடுக்கிறான். டேய் என்னை ட்விட்டர்ல நிம்மதியா இருக்க விடுடா என்று சித்தார்த் பதட்டமடைகிறார்.

பேய்

பேய்

படத்துல பேய், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் இவங்களாவது இருக்காங்களா?. பன்ச் டயலாக், இளையராஜா பாட்டு, ஹீரோயின் இது எதுவுமே இல்லாம என்ன கமர்ஷியல் படம். அதுக்கு நான் அரண்மனை 2 படமே பார்த்துடுவேன் என்று சிறுவன் ஜூட் விட சித்தார்த்& கோ ஷாக்காகி நிற்கிறது.

எல்லாம் சரி தான் வீடியோவுல நடுநடுவே மிஷ்கினையும் அடிக்கடி கலாய்க்கிறது நியாயமா சித்தார்த்?

English summary
Siddharth's Jill Jung Juk Promotion Video. A Little Boy Explained, 10 Elements Of A Commercial Film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil