»   »  சித்தார்த்-கார்த்திக் ஜி.கிரிஷ்ஷின் 'சைத்தான் கா பச்சா'

சித்தார்த்-கார்த்திக் ஜி.கிரிஷ்ஷின் 'சைத்தான் கா பச்சா'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திக் கி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் புதிய படத்திற்கு சைத்தான் கா பச்சா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

வைபவ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த கப்பல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் ஜி.கிரிஷ்.

அடுத்ததாக ஆக்ஷன் கலந்த காமெடி கதையொன்றை சித்தார்த்தை வைத்து இயக்கவிருக்கிறார். இப்படத்துக்கு சைத்தான் கா பச்சா என்று பெயர் வைத்துள்ளனர்.

Siddharth's Upcoming Movie Details

இதில் சித்தார்த்துடன் இணைந்து தம்பி ராமையா, கருணாகரன், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். கவலையற்ற இளைஞராக சித்தார்த் நடிக்கும் இப்படத்திற்கான ஹீரோயின் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 30 ம் தேதி தொடங்குகிறது. மற்றொருபுறம் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து சசியின் அடுத்த படத்தில் சித்தார்த் நடிக்கவிருக்கிறார்.

இதுதவிர மலையாள நடிகர் திலீப்புடன் இணைந்து கம்மார சம்பவம் என்ற மலையாளப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் படத்திலும் சித்தார்த் நடிக்கவுள்ளார்.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 10 ம்தேதி வெளியாகிறது. மொத்தத்தில் 4 படங்கள் தற்போது சித்தார்த் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Siddharth Next team up with 'Kappal' Fame Director Karthik G Krish, the Movie Titled by Saithaan Ka Bachcha.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil