»   »  விஜய் சேதுபதிக்கு தனியாக நடிகர் சங்கம் வேண்டும்...விஷாலிடம் கோரிக்கை வைத்த சித்தார்த்!

விஜய் சேதுபதிக்கு தனியாக நடிகர் சங்கம் வேண்டும்...விஷாலிடம் கோரிக்கை வைத்த சித்தார்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதிக்கு தனியாக ஒரு நடிகர் சங்கத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலிடம் சித்தார்த் கோரிக்கை வைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சேதுபதி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.


இந்த விழாவில் நடிகர்கள் சித்தார்த், விஜய் சேதுபதி மற்றும் சேதுபதி படக்குழுவினர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.


சேதுபதி

சேதுபதி

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் படம் சேதுபதி. முதன்முறையாக காக்கிச்சட்டை அணிந்து விஜய் சேதுபதி நடித்திருக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சேதுபதி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர்கள் சித்தார்த், விஜய் சேதுபதி மற்றும் சேதுபதி படக்குழுவினர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.


சித்தார்த்

சித்தார்த்

பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் பேசினார். அவர் கூறும்போது "பீட்ஸா படத்தில் இருந்தே விஜய் சேதுபதியை எனக்குப் பிடிக்கும். அவருடைய பண்ணையாரும் பத்மினியும் படத்தை இதுவரை நான் 3 முறை பார்த்து விட்டேன்.


விஜய் சேதுபதியுடன்

விஜய் சேதுபதியுடன்

பண்ணையாரும் பத்மினியும் படத்தைப் பார்த்ததில் இருந்து தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த இயக்குநர் கிடைத்து விட்டார் என்று தோன்றியது. உடனே அவருக்கு போன் செய்து நாம் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று கேட்டேன். அதற்கு அவர் என்னுடைய அடுத்தப் படத்தையும் நான் விஜய் சேதுபதியை வைத்தே இயக்கப் போகிறேன் என்று கூறினார்.


கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி

கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி

இதே போல ஜிகர்தண்டா படப்பிடிப்பின்போது கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டேன். அவரும் என்னுடைய முதல் ஹீரோ விஜய் சேதுபதியை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறேன் என்று கூறிவிட்டார். இதே போல சூது கவ்வும் படம் வந்த புதிதில் நலன் குமாரசாமியை கேட்டபோது அவரும் இதே பதிலைத் தான் கூறினார்.


தனி நடிகர் சங்கம்

தனி நடிகர் சங்கம்

சமீபத்தில் நான் விஷாலிடம் பேசியபோது விஜய் சேதுபதிக்காக ஒரு தனி நடிகர் சங்கத்தை நம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் வருடத்திற்கு 10 படங்களில் அவர் நடித்துக் கொண்டிருப்பார் என்று கூறினேன்.ஒரு கோரிக்கை

ஒரு கோரிக்கை

என்னுடைய கோரிக்கை என்னவென்றால் விஜய் சேதுபதி நீங்கள் உங்களுடைய இயக்குநர்களை மற்ற நடிகர்கள் படங்களை இயக்கவும் அனுப்பி வையுங்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் விஜய் சேதுபதி என்னும் அரணை விட்டு வெளியே வரமறுக்கிறார்கள்" என்று கூறினார். சித்தார்த்தின் இந்த கோரிக்கையை விஜய் சேதுபதி பரிசீலனை செய்வாரா? பார்க்கலாம்.
English summary
"Vijay Sethupathi you should Allow your own Directors to make Films for Others too" Siddharth says in Sethupathi Audio Launch.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil