»   »  சித்தார்த்தின் பரபரப்பு "தத்துவம்".. அது யாரு "உளுந்தூர்ப்பேட்டை நாய்"?

சித்தார்த்தின் பரபரப்பு "தத்துவம்".. அது யாரு "உளுந்தூர்ப்பேட்டை நாய்"?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த ஒரு தத்துவம் தற்போது கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். அதிலும் சமீபத்தில் தமிழகத்தை புரட்டிப் போட்ட கனமழையில் சித்தார்த்தின் உதவி மனப்பான்மை அனைவரையும் கவர்ந்து, மக்கள் மனதில் ஒரு உயர்ந்த இடத்தையும் அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

Siddharth Mentioned Who?

இந்நிலையில் நேற்று தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் இடம்பெற்ற "நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டைல இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்ணு எழுதி இருந்தா அத யாராலயும் மாத்தமுடியாது.. #தமிழ் #தத்துவம்" என்ற வசனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. எனினும் யாரோ ஒரு முன்னணி நடிகரை (அல்லது நடிகர்களைத்தான்) அவர் குறிப்பிடுகிறார் என்று சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் சூடு பறக்கின்றன.

இந்தத் தத்துவம் எதற்காக. ஏன் இப்போது என்பதை சித்தார்த்தே விளக்கினால்தான் உண்டு.. அதற்கு விடை தெரியும் வரை, பேசாமல் அனைவரும் சித்தார்த் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள அரண்மனை 2 படத்தைப் பார்த்து ரசிப்போம் வாருங்கள்!

English summary
Actor Siddharth Registered on its Twitter page to a Philosophy, Now that has Become one of the Contentious Issues of Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil