»   »  மணிரத்னத்தின் உதவியாளருக்கு வாய்ப்பளித்த சித்தார்த்

மணிரத்னத்தின் உதவியாளருக்கு வாய்ப்பளித்த சித்தார்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சித்தார்த்துக்கு இது சற்று நிதானித்து களம் இறங்க வேண்டிய கட்டாயம். சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. தீயா வேலை செய்யணும் குமாருக்கு பிறகு அதுபோன்ற ஒரு சூப்பர் ஹிட் தர முடியவில்லை.

இரண்டு ஹீரோக்களில் ஒருவராக இயக்குனர் சசியின் படத்தில் நடிப்பவர் அடுத்து நடிக்கவிருப்பது மணிரத்னத்தின் உதவியாளர் படத்தில். மணியின் உதவி இயக்குனரான மிலிண்ட் ராவ் ஆர்யாவின் தம்பி சத்யாவை வைத்து காதல் டூ கல்யாணம் என்ற படத்தைத் தொடங்கினார். அது பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

Sidhardh gives chance to Manirathnam assistant

மணிரத்னத்தின் முன்னாள் உதவியாளரான சித்தார்த்துக்கு மிலிண்ட் ராவின் திறமை தெரியும் என்பதால் சித்தார்த்தே மிலிண்டை அழைத்து தன் படத்தை தனது பேனரிலேயே இயக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

இந்தி, தெலுங்கு, தமிழ் மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்துக்கு த நெக்ஸ்ட் டோர் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். சித்தார்த்துக்கு ஜோடி ஆண்ட்ரியா.

English summary
Actor Sidhard has gave a chance to Manirathnam's assistant Milind Rao to direct his movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil