»   »  முன்னணி நடிகர்கள் செய்யத் தயங்கும் காரியத்தைச் செய்த நடிகர் சித்தார்த்!

முன்னணி நடிகர்கள் செய்யத் தயங்கும் காரியத்தைச் செய்த நடிகர் சித்தார்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இரண்டு மாதத்தில் மூன்று படம் பண்ணும் சித்தார்த்!- வீடியோ

பொதுவாக ஒரு நடிகர் வருடத்திற்கு இரண்டு படம் அல்லது ஒரு படம் என்கிற கணக்கில்தான் கால்ஷீட் கொடுப்பார்கள். சிலர் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை என்ற கணக்கும் வைத்திருக்கிறார்கள்.

முதல் முறையாக அந்த ரூட்டை மாற்றியிருக்கிறார் நசிகர் சித்தார்த். எப்படி?
வைபவ் நடிப்பில் 'கப்பல்' படத்தை இயக்கிய கார்த்திக்.ஜி யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சித்தார்த். அதன் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. இந்தப் படத்திற்கு சித்தார்த் இருபது நாள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

Sidhardh's new decision

இருபது நாளில் எப்படி ஒரு ஹீரோ படத்தை எடுக்கமுடியும்? சித்தார்த்திற்கான டேட் மட்டும்தான் இருபது நாள். மற்றபடி கதையின் தேவைக்கேற்ப நாள்கள் கூடும். ஹீரோவுக்கான போர்ஷனை இருபது நாளுக்குள் முடிக்கிற மாதிரி ஷெட்யூல் போடச் சொல்லியிருக்கிறார்.

'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் ஒரு படமும், 'பிச்சைக்காரன்' படத்தை இயக்கிய சசி இயக்கத்தில் இன்னொரு படமும் நடிக்கவிருக்கிறார். இந்தப் படங்களுக்கும் தலா இருபது நாள்தானாம்!

Sidhardh's new decision

ஆக, இரண்டு மாதத்தில் மூன்று படம். வழக்கமாக வாங்கும் சம்பளம் இல்லாமல் கொடுத்த தேதிக்கேற்ப சம்பளத்தையும் குறைத்து வாங்கியிருக்கிறார்!

நல்ல கதைகளை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக இந்த முடிவாம்.

குட் சித்தார்த்.

English summary
Sidhardh has divided his callsheets as 20 days schedule per film to act movre movies

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil