»   »  "ரெட் ரோஸை"க் கையில் எடுக்கும் பாரதிராஜா மகன்... மீண்டும் வருவாரா ஸ்ரீதேவி?

"ரெட் ரோஸை"க் கையில் எடுக்கும் பாரதிராஜா மகன்... மீண்டும் வருவாரா ஸ்ரீதேவி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை ஸ்ரீதேவியை நடிக்க வைக்கும் முயற்சியில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஈடுபட்டிருப்பதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.

பாரதிராஜா இயக்கத்தில் கமல் - ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்'. 2 கிராமத்துப் படங்களைக் கொடுத்த பாரதிராஜா, 3வதாக கொடுத்த சிட்டி சப்ஜெக்ட்தான் இந்த சிகப்பு ரோஜாக்கள். கடந்த 1978ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கமல் பெண்களைக் கொலை செய்யும் சைக்கோவாக நடித்திருந்தார். இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் இனிமையாக அமைந்திருந்தன.

வெற்றிப்படமான இதன் இரண்டாம் பாகத்தை தற்போது பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஸ்ரீதேவி...

ஸ்ரீதேவி...

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகை ஸ்ரீதேவியை மனோஜ் அணுகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலி...

புலி...

திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டிலான ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விஜய்யுடன் ‘புலி' படத்தில் நடித்து வருகிறார். எனவே ‘சிகப்பு ரோஜாக்கள்' இரண்டாம் பாகத்தில் நடிக்க அவர் சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிராஜாவும்...

பாரதிராஜாவும்...

அதை விட முக்கியமானது பாரதிராஜாவே இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அவரும், ஸ்ரீதேவியும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்கிறார்கள்.

16 வயதினிலே...

16 வயதினிலே...

பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் மூலமாகத் தான் ஸ்ரீதேவி தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாகன்...

விசாகன்...

சரி அப்ப கமல் வேடத்தில் யாருன்னு எதிர்பார்ப்பு வருதில்ல.. அந்த வேடத்தில் விசாகன் என்பவர் நடிக்கவிருக்கிறாராம். இவர் ஹாலிவுட்டில் பயிற்சி பெற்றவராம்.

English summary
Sigappu Rojakkal features Kamal Haasan and Sridevi in lead roles and now Sigappu Rojakkal is all set for its part 2 (Sigappu Rojakkal 2). Bharathiraja’s son Manoj Bharathiraja would be remaking the film. Now the latest buzz is that yesteryear actress Sridevi will also star in the sequel and reportedly, she will be appearing alongside Bharathiraja who plays a crucial role in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil