Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
2021ம் ஆண்டின் சிறந்த படங்கள்.. கர்ணன், டாக்டர், மாஸ்டர்.. சைமாவில் மாஸ் காட்டும் தமிழ் படங்கள்!
சென்னை: தென்னிந்திய சினிமாவிற்கான சைமா விருதுகள் விழா விரைவில் நடைபெற உள்ளது.
Recommended Video
இந்நிலையில், தமிழ் சினிமாவில் அதிக நாமினேட் செய்யப்பட்ட தமிழ்ப் படங்கள் குறித்த பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது.
அதில், தனுஷின் கர்ணன், சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் மாஸ்டர் மற்றும் கங்கனா ரனாவத்தின் தலைவி உள்ளிட்ட படங்கள் அதிக நாமினேஷன்களை பெற்றுள்ளன.
இயக்குநர் ஷங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல்.. இந்தியன் 2வை டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
சைமா விருதுகள்
கருப்பு நிற கவர்ச்சி சிலையை சினிமாவில் சிறந்த படங்களுக்கு வழங்கும் விழா தான் சைமா. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்திய படங்களுக்கும் விருதுகளை பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தி சைமா வழங்கி வருகிறது. விரைவில் தென்னிந்திய படங்களுக்கான சைமா விருது பெங்களூருவில் நடைபெற உள்ள நிலையில், அதில் அதிக நாமினேட் ஆன தென்னிந்திய படங்கள் பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது.
10 பிரிவுகளில் கர்ணன்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த கதை உள்ளிட்ட 10 பிரிவுகளுக்கு தேர்வாகி உள்ளதாக சைமா அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. அதிக விருதுகளை கர்ணன் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 பிரிவுகளில் டாக்டர்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியாகி தியேட்டர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய டாக்டர் திரைப்படம் 9 பிரிவுகளில் சைமா விருது விழாவில் களம் காண்கிறது. தனுஷின் கர்ணன் படத்துடன் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் டஃப் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 பிரிவுகளில் மாஸ்டர்
அதற்கு அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 7 பிரிவுகளில் போட்டி போடுகிறது. அதிக நாமினேஷன் பெற்றுள்ள இந்த 3 படங்களுக்கும் ரசிகர் வட்டம் அதிகமாக உள்ளதால் விருது அறிவிக்கும் போது பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கனா ரனாவத்தின் தலைவி
சிறந்த நடிகை, சிறந்த மேக்கப் உள்ளிட்ட 7 பிரிவுகளில் கங்கனா ரனாவத்தின் தலைவி திரைப்படமும் இந்த போட்டியில் சர்ப்ரைஸ் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறது. 2021ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கு இடையே நடைபெற உள்ள இந்த போட்டியில் எந்த எந்த படங்கள் எத்தனை விருதை அள்ளப் போகின்றன என்பது விரைவில் தெரிந்து விடும். இந்த போட்டியில் ஓடிடி படங்கள் இல்லையா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளன.