Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
SIIMA Awards 2022...தமிழில் சிறந்த நடிகர் யார்...பரிந்துரைக்கப்பட்ட அந்த 6 பேர் இவங்க தான்
சென்னை : தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
Recommended Video
தென்னிந்திய திரைப்படங்களையும், அதில் பணியாற்றுபவர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கெளரவிக்கும் விதமாக சைமா விருதுகள் (South Indian International Movie Awards) 2012 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாக சைமா விருது கருதப்படுகிறது. மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி சினிமாக்களுக்கு இது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர், துணை கதாபாத்திரங்கள் என பல பிரிவுகளில் சைமா விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு சைமா விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடத்தப்பட்டது.
சமந்தாவை மிஞ்சிய ராஷ்மிகா...இதில் இவர் தான் நம்பர் ஒன் நடிகையா ?

சைமா விருது விழா எப்போ
இந்நிலையில் இந்த ஆண்டு சைமா விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சைமா விருதுகள் அறமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த ஆண்டு நடக்கும் விழாவை கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பரிந்துரை பட்டியல் வெளியிடும் சைமா
இந்நிலையில் சைமா, இந்த ஆண்டு ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு பிரிவிற்கும் பரிந்துரைக்கப்பட்ட படங்கள், கலைஞர்களின் பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. தமிழில் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிட்டுள்ளது.

தமிழில் சிறந்த படம் எது?
2021 ம் ஆண்டு தமிழில் வெளியான சிறந்த படத்திற்கான விருதிற்கு டாக்டர், சார்பட்டா பரம்பரை, கர்ணன், மாநாடு, தலைவி, மண்டேலா ஆகிய 6 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 2021 ம் ஆண்டிற்கான விருதுகள் பிரிவில் அதிகபட்சமாக கர்ணன் படம் 10 பிரிவுகளுக்கும், டாக்டர் படம் 9 பிரிவுகளுக்கும், மாஸ்டர் 7 பிரிவுகளுக்கும், தலைவி 7 பிரிவுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியல்
இந்நிலையில் இன்று தமிழில் 2021 ல் சிறந்த நடிகர் லீட் ரோல் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. இதில் ஆர்யா (சார்பட்டா பரம்பரை), தனுஷ் (கர்ணன்), விஜய் (மாஸ்டர்), சிலம்பரசன் (மாநாடு), சிவகார்த்திகேயன் (டாக்டர்), சூர்யா (ஜெய்பீம்) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ரசிகர்களின் தேர்வு என்ன
சூர்யாவிற்கு தான் இந்த விருது கிடைக்கும் என அதிகமானவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் ஆர்யா, சூர்யா, தனுஷ் மூன்று பேரில் ஒருவருக்கு இந்த விருது கிடைத்தால் தான் சரியாக இருக்கும் என கமெண்ட் செய்துள்ளனர். ஒவ்வொரு விருதும் ரசிகர்கள் அளிக்கும் ஒட்டுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.