SIIMA 2025: சிறந்த வில்லன் கமல்.. சிறந்த நடிகர் அல்லு அர்ஜூன்.. விருது வென்றவர்களின் முழு பட்டியல்!
துபாய்: துபாயில் நடைபெற்ற SIIMA 2025 விருது விழாவில், தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு முதல் நாள் விருதுகள் வழங்கப்பட்டன. நேற்று துபாய் எக்ஸ்போ சிட்டியில் உள்ள துபாய் கண்காட்சி மையத்தில் இந்த விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 6ஆம் தேதியான இன்று தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினருக்கு விருதுகள் வழங்கப்பட்ட உள்ளன.
இந்த விழாவில், 2024 ஆம் ஆண்டு வெளியான 'கல்கி 2898 AD' திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. அந்த படத்தில் வில்லனாக நடித்த கமலுக்கு சிறந்த வில்லனுக்கான விருதும், மூத்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றனர். புஷ்பா 2வில் சிறப்பாக நடித்திருந்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதையும், சுகுமார் சிறந்த இயக்குனருக்கான விருதையும் வென்றனர். புஷ்பா 2 திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ரஷ்மிகா மந்தனா சிறந்த நடிகை விருதை வென்றார்.

SIIMA: விருது வென்றவர்களின் முழுமையான பட்டியல்:
சிறந்த படம்: கல்கி 2898 AD
சிறந்த இயக்குநர்: சுகுமார் (புஷ்பா 2: தி ரூல்)
சிறந்த இயக்குநர் (விமர்சகர்கள்): பிரசாந்த் வர்மா (ஹனுமான்)
சிறந்த நடிகர்: அல்லு அர்ஜுன் (புஷ்பா 2: தி ரூல்)
சிறந்த நடிகர் (விமர்சகர்கள்): தேஜா சஜ்ஜா (ஹனுமான்)
சிறந்த நடிகை: ரஷ்மிகா மந்தனா (புஷ்பா 2: தி ரூல்)
சிறந்த நடிகை: மீனாட்சி சவுத்ரி (லக்கி பாஸ்கர்)
சிறந்த துணை நடிகர்: அமிதாப் பச்சன் (கல்கி 2898 AD)
சிறந்த துணை நடிகை: அன்னா பென் (கல்கி 2898 AD)
சிறந்த இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத் (புஷ்பா 2)
சிறந்த பாடலாசிரியர்: ராமாஜோகய்யா சாஸ்திரி (தேவாரா)
சிறந்த பின்னணிப் பாடகர்: சங்கர் பாபு கந்துகுரி (பீலிங்ஸ் - புஷ்பா 2: தி ரூல்)
சிறந்த பின்னணிப் பாடகி: ஷில்பா ராவ் (சுட்டமல்லே - தேவாரா)
சிறந்த வில்லன்: கமல்ஹாசன் (கல்கி 2898 AD)
சிறந்த அறிமுக நடிகை: பங்கூரி பாக்யஸ்ரீ போர்ஸ் (மிஸ்டர் பச்சன்)
சிறந்த அறிமுக நடிகர்: சந்தீப் சரோஜ் (கமிட்டி குறோளு)
சிறந்த அறிமுக இயக்குநர்: நந்த கிஷோர் யேமானி
சிறந்த அறிமுக தயாரிப்பாளர்: நிஹாரிகா கொனிடேலா
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரத்னவேலு (தேவாரா)
சிறந்த நகைச்சுவை நடிகர்: சத்யா (மாத்து வதலரா 2)


Click it and Unblock the Notifications











