Don't Miss!
- News
பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? "அதுக்கு பதிலாக உயிரையே மாய்த்துக் கொள்வேன்" - நிதிஷ் குமார் 'சுறுக்'
- Technology
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Automobiles
2.5 கோடி இதயங்களை வென்ற மாருதி! டாடா, ஹூண்டாய் எல்லாம் பக்கத்துலகூட வர முடியாது
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
சிம்பு –ஹன்சிகா நடித்த ‘மஹா‘..மக்கள் சொன்ன பிளஸ், மைனஸ் ரிப்போர்ட்!
சென்னை : மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் வி.மதியழகன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ள படம், 'மஹா'. இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.
Recommended Video
ஸ்ரீகாந்த், ரேஷ்மா, சனம் ஷெட்டி, மேகா ஸ்ரீகாந்த், நந்திதா ஜெனிபர், தம்பி ராமையா, மகத், கருணாகரன், சுஜித் சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இன்று வெளியாகி உள்ள இத்திரைப்படம் குறித்து பொதுமக்கள் சொன்ன பிளஸ் மற்றும் மைனஸ் என்னனு பார்க்கலாமா?
ரசிகர்கள் கொண்டாட்டத்தில் 100 நாட்களை கடந்த கேஜிஎப்2 படம்.. கொண்டாட்டத்தில் படக்குழு!

ஹன்சிகாவின் 50வது படம்
'மஹா' படம், ஹன்சிகா மோத்வானியின் 50வது படமாகும். இந்தப் படம் வெளியாவதற்கு பல சிக்கல்கள் எழுந்தன. இருந்தாலும் தடைகளை கடந்து இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. குழந்தைகளை கடத்திக் கொள்ளும் சைக்கோ கொலையாளி பற்றிய திரில்லர் கதை தான் மஹா. இப்படத்தில் ஒரு குழந்தையின் தாயாக தனது அனுபவமிக்க நடிப்பால் ஹன்சிகா கலக்கி இருக்கிறார்.

காட்சிக்கு காட்சி பரபரப்பு
பல ஆண்டுகளுக்கு முன்பே அப்படத்தின் படப்பிடிப்பு பணியில் முடிந்து பல்வேறு பிரச்சினைகளால் படம் வெளியாகாமல் இருந்தது. காட்சிக்கு காட்சி பரபரப்பு விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லாமல் கதையை நகர்த்தி இருக்கிறா இயக்குநர். இந்த படத்தை பார்க்கும் பெற்றோருக்கு குழந்தைகளை பத்திரமாக பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படும். திரில்லர் கதைகளை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பிளஸ்
ஹன்சிகா மற்றும் சிம்பு வரும் காட்சிகள், அவர்களின் ரொமான்ஸ் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. கொலையாளி வரும் காட்சிகளில் தெறிக்க விடப்படும் பின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டி இருக்கிறார். மஹா படத்துக்கு இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. குழந்தைகளை பெற்றோர் எப்படி பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து படத்தில் உள்ளது. குடும்பத்தோடு அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

மைனஸ்
சிம்பு படத்தில் 40நிமிடம் வருவார என்று சொன்னாங்க, அதனால், ரொம்ப ஆர்வத்தோடு வந்தோம். ஆனால்,படம் ஆரம்பிக்கும் போது ஒரு 10 பத்து நிமிஷம் வருகிறார். மறுபடியும், ஒரு பிளாஸ் பேக்கில் வருகிறார் அது ஏமாற்றமாக இருந்தது. மேலும், சிம்பு என்டரி சீனும் சரியாக இல்லை கடைசியில் அவருக்கு என்ன ஆச்சுனும் சொல்ல வில்லை. இதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் என்று சிம்புவின் தீவிர ரசிகர்கள் வருத்தத்துடன் கூறினர்.