நெல்சனுக்கு சிக்னல் கொடுத்த சிம்பு… ஜெயிலர் ரிசல்ட் ஃபர்ஸ்ட்… நெக்ஸ்ட் வேட்டை மன்னன் ரீ-ஸ்டார்ட்

சென்னை: பத்து தல படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்து கொரோனா குமார் அல்லது விண்ணைத்தாண்டி வருவாயா செகண்ட் பார்ட்டில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சிம்புவும் ஒரு படம் இயக்கி அதில் ஹீரோவாக நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தை இயக்கி வரும் நெல்சனுடன் சிம்பு கூட்டணி அமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்புவின் அடுத்த படம்?

சிம்புவின் அடுத்த படம்?

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை ஹிட் கொடுத்த சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடிக்கிறார். அவருடன் கலையரசன், பிரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர். பத்து தல படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படம் என்ன, இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதன்படி, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் அல்லது கெளதம் மேனன் இயக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படங்களில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் தொடங்கும் வேட்டை மன்னன்

மீண்டும் தொடங்கும் வேட்டை மன்னன்

கொரோனா குமார், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படங்கள் குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சிம்பு ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, வேட்டை மன்னன் படத்தை மீண்டும் தொடங்க சிம்பு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2016ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிப்பதாக தொடங்கப்பட்ட படம் வேட்டை மன்னன். சிம்புவுடன் ஹன்சிகா, ஜெய், சந்தானம் ஆகியோரும் வேட்டை மன்னன் படத்தில் கமிட் ஆகியிருந்தனர். ஆனால், பட்ஜெட் பிரச்சினை காரணமாக தொடங்கிய வேகத்திலேயே ட்ராப் ஆனது வேட்டை மன்னன்.

சிம்பு கொடுத்த சிக்னல்

சிம்பு கொடுத்த சிக்னல்

நெல்சனின் முதல் படமே வேட்டை மன்னன் தான், ஆனால் அது ட்ராப் ஆனதும் அடுத்து நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன். அதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் படங்களை இயக்கினார் நெல்சன். இப்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஜெயிலர் படம் வந்ததும் அதன் ரிசல்ட்டை பார்த்துவிட்டு வேட்டை மன்னனை தொடங்கலாம் என சிம்பு நெல்சனுக்கு சிக்னல் கொடுத்துள்ளாராம். டாக்டர் வெற்றிக்குப் பிறகு நெல்சன் இயக்கிய பீஸ்ட் ப்ளாப் ஆனது. அதனால், ஜெயிலர் ரிசல்ட் முதலில் வரட்டும் என காத்திருக்கிறாராம் சிம்பு.

ஆக்ஷன் திரில்லர்

ஆக்ஷன் திரில்லர்

வேட்டை மன்னன் திரைப்படம் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் இருக்கும் என நெல்சன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும், அந்த ஸ்கிரிப்ட் சிம்புவுக்காகவே எழுதியது என்றும் பேசியிருந்தார். இப்போது அதில் ஹன்சிகா நடிக்க வாய்ப்பில்லை என்பதால், வேறு யாரை நடிக்க வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வேட்டை மன்னன் இசையமைப்பாளராக யுவன் கமிட் ஆகியிருந்தார், நெல்சனுடன் யுவன் காம்போ எப்படி இருக்கும் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். இதனிடையே ஜெயிலர் ரிலீஸுக்கு முன்னரே வேட்டை மன்னன் படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X