மாநாடு ரிலீஸ் தேதி கசிந்தது...டப்பிங்கில் பிஸியான சிம்பு
சென்னை : சிலம்பரசனின் திரைப்பயணத்தில் முக்கியமாக படமாக கருதப்படுவது டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படம். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
மே மாத ஆரம்பத்தில் இருந்தே மாநாடு படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து வருகிறது. கடந்த வாரம் தான் டப்பிங் பேசியதை நடிகர் உதயாவும் ஃபோட்டோவுடன் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் லேட்டஸ்ட்டாக தனது டப்பிங் வேலைகளை நேற்று முதல் துவக்கி உள்ளார் சிம்பு.

சிங்கிள் பாடல் டீசர்
மாநாடு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜுன் 21 ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிவித்திருந்தார். ஆனால் தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அந்த பாடலின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட உள்ளதாக சிம்பு அறிவித்தார்.

யூட்யூப்பில் குவியும் லைக்
அதன்படி நேற்று மாலை வெளியிடப்பட்ட மெஹரிஜைலா பாடலை சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். யூட்யூப்பில் இந்த டீசர் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகிறது. இதன் முழு பாடல் ஜுன் 21 ல் வெளியிடப்பட உள்ளது.

லீக்கான ரிலீஸ் தேதி
முதலில் மே 14 ரம்ஜானை முன்னிட்டு மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா, லாக்டவுன் போன்ற காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. லேட்டஸ்ட் தகவலாக ஆயுத பூஜை வார இறுதி நாளான அக்டோபர் 14 அன்று படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

தியேட்டர் திறந்ததும் ரிலீஸ்
மாநாடு படத்தை தியேட்டர் ரிலீஸ் செய்வதில் படக்குழு உறுதியாக உள்ளதால், தியேட்டர்கள் திறக்கப்பட்டால் அக்டோபர் 14 ல் படம் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. அதற்கு முன் பக்ரீத் பண்டிகை அன்று படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

முக்கிய நடிகர்கள்
வெங்கட் பிரபு இயக்கி உள்ள மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, வாகை சந்திரசேகர், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











