சிம்புவை எல்லோருக்கும் பிடிக்கும்... ஆனால் அவருக்கு யாரை பிடிக்கும் தெரியுமா?

சென்னை : நடிகர் சிம்புவிற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் மாநாடு படத்திற்க பிறகு பலமடங்கு அதிகரித்து விட்டது. அவரது அடுத்த படம் எப்படி இருக்கும், என்ன ரோல், எப்படி நடித்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் சிம்பு தனது 39வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் தனது தந்தை டி.ராஜேந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட சிம்பு, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். வளர்ந்த பிறகு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். துறுதுறுவென்ற சாக்லேட் பாயாக, துணிச்சலாக கல்லூரி இளைஞராக பல படங்களில் நடித்துள்ளார்.

மாநாடு தந்த வெற்றி

மாநாடு தந்த வெற்றி

மன்மதன், வல்லவன் போன்ற படங்கள் சிம்புவிற்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தன. அதற்கு பிறகு பல பிரச்சனைகளில் சிக்கிய சிம்புவிற்கு, நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரம்மாண்ட வெற்றியை மாநாடு படம் கொடுத்துள்ளது. 100 கோடி கிளப்பில் இணைந்தது மட்டுமின்றி, பலரிடமும் சிம்புவின் பாராட்டை பெற்றது. இதனால் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

பிறந்தநாள் ட்ரீட்

பிறந்தநாள் ட்ரீட்

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்கு மூன்று ட்ரீட்களை கொடுக்க, சிம்பு நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு ட்ரீட்டாக சிம்புவின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம். அதோடு மூன்றாவது ட்ரீட்டாக சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் மாஸ் லுக்கில் தோன்றும் சிம்புவின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிம்புவிற்கு பிடித்த விஷயங்கள்

சிம்புவிற்கு பிடித்த விஷயங்கள்


இந்நிலையில் சிம்புவை அனைவருக்கும் பிடித்திருந்தாலும், அவருக்கு எந்த நடிகரை பிடிக்கும், வேறு என்னவெல்லாம் பிடிக்கும் என்ற பலருக்கும் தெரியாத சிம்புவை பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சிம்புவிற்கு பிடித்த நடிகர் - ரஜினி, அஜித்

பிடித்த உணவு - சிக்கன் பிரியாணி

பிடித்த விளையாட்டு - கிரிக்கெட், ஃபுட்பால்

பிடித்த இடம் - Bessy

அதிக நேரம் செலவிடுவது - தன்னுடைய மியூசிக் ஸ்டூடியோ

சிம்புவின் ஆசை - அண்ணாமலை ரீமேக்கில் நடிப்பது

பிடித்த இளம் இசையமைப்பாளர் - அனிருத்

பொழுதுபோக்கு - பாடுவது, எழுதுவது

Recommended Video

Silambharasan-ஐ கட்டி அனைத்து முத்தமிட்ட TR & Usha | Simbhu Speech After receiving Doctorate, STR
சிம்புவின் சொத்து மதிப்பு

சிம்புவின் சொத்து மதிப்பு

சிம்புவின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.150 கோடியாம். சிம்பு தற்போது ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சிம்புவிற்கு பிஎம்டபிள்யூ கார், பைக் என்றால் மிகவும் நடிக்குமாம். இதை அவரை பலமுறை சொல்லி இருக்கிறார். இதனால் 2020 ம் ஆண்டு சிம்புவின் பிறந்தநாளுக்கு அவரது அம்மா உஷா ராஜேந்தர், Mini Cooper காரை பரிசாக வழங்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X