twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகுடம் சூடிய மன்மதன்.. கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு..யாருக்கு டெடிகேட் பண்ணிருக்கார் தெரியுமா ?

    |

    சென்னை : நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் இன்று வழங்கப்பட்டது. இதற்காக ட்விட்டரில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு, இந்த பட்டத்தை முக்கியமான சிலருக்கு டெடிகேட் செய்வதாக கூறி உள்ளார்.

    Recommended Video

    Silambharasan -ஐ கட்டி அனைத்து முத்தமிட்ட TR & Usha | Simbhu Speech After receiving Doctorate, STR

    தனது அப்பாவும் டைரக்டருமான டி.ராஜேந்தர் இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள சிம்பு, 2002 ம் ஆண்டு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தமிழில் மட்டுமின்றி பிற தென்னிந்திய மொழிகளிலும் நடித்தார் சிம்பு.

     சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகும் 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகும் 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    ரீஎன்ட்ரி கொடுத்த சிம்பு

    ரீஎன்ட்ரி கொடுத்த சிம்பு

    இதுவரை 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சிம்பு. பல சர்ச்சைகளினால் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு, ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். உடல் தோற்றத்தில் மட்டுமின்றி சிம்புவின் சினிமா வாழ்க்கைக்கும் மிகப் பெரிய Come back ஆக அமைந்தது ஈஸ்வரன் படம். இருந்தாலும் அந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை.

    100 கோவி கிளப்பில் மாநாடு

    100 கோவி கிளப்பில் மாநாடு

    இதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. 25 நாட்களில் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்ததுடன், சிம்புவின் நடிப்பிற்கு பாராட்டுக்களை அள்ளி குவித்துள்ளது. தியேட்டர் மட்டுமின்றி ஓடிடி.,யில் அதிக வரவேற்பை பெற்ற படமாகவும், அதிகமானவர்கள் ரசித்த படமாகவும் மாநாடு மாறி உள்ளது.

    கெளரவ டாக்டர் பட்டம்

    கெளரவ டாக்டர் பட்டம்

    தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமாரு உள்ளிட்ட பல படங்களில் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் கலைச்சேவையை பாராட்டி வேல்ஸ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.

    நன்றி சொன்ன சிம்பு

    நன்றி சொன்ன சிம்பு

    வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்காக செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்கும், தன்னை வாழ்த்தியவர்களுக்கும் ட்விட்டரில் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.

    யாருக்கு டெடிகேட் பண்ணிருக்கார்

    யாருக்கு டெடிகேட் பண்ணிருக்கார்

    சிம்பு தனது பதிவில், இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை எனக்கு வழங்கியதற்காக வேல்ஸ் பல்கலைக்கழக உறுப்பினர்கள், ஐசரி கணேசன் ஆகியோருக்கு நன்றி. இந்த மிகப் பெரிய கெளரவத்தை நான் தமிழ் சினிமா, என் அப்பா, அம்மாவிற்கு டெடிகேட் செய்கிறேன். அவர்களால் தான் இந்த சினிமா எனக்கு கிடைத்தது. கடைசியாக எனது ரசிகர்கள். நீங்க இல்லாம நான் இல்ல. நன்றி இறைவா என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Vels University honoured Simbu with honoaray doctarate. Simbu thanked every one for this honour.He dedicated this honour to tamil cinema, his parents and fans. Celebrities, fans shared their wishes to simbu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X