தட்டித் தூக்கிய சிம்பு... இது வேற லெவல் “மாநாடு“ ... ட்விட்டர் விமர்சனம் !

சென்னை : சிம்புவின் மாநாடு படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

ட்விட்டரில் மாநாடு திரைப்படம் குறித்து கருத்துக்களை தெறிக்கவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

சிம்புவின் தீவிர ரசிகர்கள் மழையை பொருட்படுத்தாமல் மாநாடு திரைப்படத்தை பார்த்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.

மாநாடு

மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

சிக்கல் தீர்ந்தது

சிக்கல் தீர்ந்தது

மாநாடு திரைப்படம் இன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்து இருந்தார். அதன்பிறகு சிம்பு குடும்பத்தினர் சிக்கலை தீர்க்க முடிவு செய்தனர். பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு திட்டமிட்டபடி மாநாடு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

ஆனால், தியேட்டர்களுக்கு கேடிஎம் கிடைக்காததால் காலை 5 மணி காட்சி ரத்தானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காலை 8 மணிக்கு கேடிஎம் வழங்கப்பட்டு மாநாடு படம் திரையரங்குகளில் வெளியானது. சிம்புவின் மாநாடு படத்தை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மாநாடு பெரிய சர்ப்ரைஸ்

மாநாடு பெரிய சர்ப்ரைஸ்

டைம் லூப் திரைப்படம் தான்னு எதிர்பாத்துனு போறவங்களுக்கே பெரிய surprise இருக்கு. வேறலெவல் ஸ்க்ரீன் ப்ளே. சிம்பு சிம்பிள், மகத் சூப்பர், யுவன் சங்கர் ராஜா பின்னிட்டாரு . சிலபல குறைகள் இருந்தாலும் ஓவரால் சூப்பர். என பதிவிட்டுள்ளார்.

மாநாடு தீபாவளி

மாநாடு தீபாவளி

மாநாடு முதல் நாள் முதல் காட்சி, இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படம், மாநாடு தீபாவளி ஆரம்பம். சிம்பு திரும்பி வந்துவிட்டார் என்று மாநாடு திரைப்படத்தை கொண்டாடி உள்ளார்.

Recommended Video

Maanadu Audience Opinion | Simbhu, Venkat Prabhu, SJ Suryah
2வது பாதி செம

2வது பாதி செம

2வது பாதி பயங்கரமாக இருந்தது. சிம்பு மற்றும் எஸ்.ஏ. சூர்யாவின் மோதல் மாஸ். லவ் யூ சிம்பு அண்ணா, 2வது பாதி செம... உண்மையா சொல்றேன் 5/5.. படம் சூப்பர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

மாநாடு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி ரசிகர்கள் ஆராவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். மாநாடு டைட்டில் கார்டை ரசிகர்கள் ஆட்டம்போட்டு வரவேற்றனர்.

கொல மாஸ்

டைட்டில் கார்ட்டில் சிம்பலரசன் பெயரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டனர். நீண்ட நாட்களுக்கு பின் திரையரங்கில் இப்படி மாஸ் படம் வெளியாகி உள்ளதை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #Simbu #Maanaadu ஹேஸ்டேக்குகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X