சிம்புவை அடுத்து இயக்க போவது இவர் தானா?...செம காம்போ தான்...அப்போ அந்த படம் என்னாச்சு?
சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. இதில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான டப்பிங் வேலைகளை முடித்து விட்டதாக சிம்பு புதிய அப்டேட்டை நேற்று வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் சிம்பு நடித்து வந்தார்.
ஆனால் தனது தந்தை டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டி இருந்ததால் ஷுட்டிங்கை பாதியிலேயே நிறுத்தி விட்டு, அமெரிக்கா சென்றார். சமீபத்தில் இந்தியா திரும்பிய சிம்பு, 2 நாட்களுக்கு முன் பத்து தல படத்தின் ஷுட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார். இந்த ஷுட்டிங் மைசூரில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

சிம்புவின் அடுத்த படம்
பத்து தல படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிம்பு, கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் நடிக்கிறார் என பல மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. ஆனால் இதுவரை இந்த படம் பற்றிய உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை.

வதந்திகளை மறுத்த சுதா கொங்கரா
பத்து தல படத்திற்கு பிறகு சிம்பு யாருடைய படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படாத நிலையில், ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. ஆனால் இது வதந்தி மட்டுமே என சுதா கொங்கராவே தனது பேட்டி ஒன்றில் மறுத்து விட்டார். இதனால் சிம்புவின் அடுத்த படம் என்ன என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பத்தில் உள்ளனர்.

சிம்புவை இவர் இயக்க போகிறாரா
இந்த சமயத்தில் லேட்டஸ்ட் தகவலாக, சிம்புவின் அடுத்த படத்தை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் 66 வது படத்தை முருகதாஸ் தான் இயக்க போகிறார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அது முடியாமல் போனதால் கடந்த 2 ஆண்டுகளாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார் முருகதாஸ். 2 ஆண்டு இடைவேளைக்கு பிறகு தற்போது கோச்சடையான் டைப்பில் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

சிம்புவின் பான் இந்தியா படம்
இந்த சமயத்தில் சிம்புவை சந்தித்து பல மொழிகளில் உருவாகும் படத்திற்கு கதை சொல்லி உள்ளார். சிம்புவுற்கு கதை மிகவும் பிடித்து விட்டதால் விரைவில் இந்த புதிய காம்போ இணைய உள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. சிம்புவின் மாநாடு படத்திற்கு மற்ற மொழிகளிலும் வரவேற்பு இருந்ததால் இந்த படம் நிச்சயம் பான் இந்தியா படமாக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

அப்போ அந்த தகவல் பொய்யா
அதே சமயம் ஏ.ஆர்.முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் - ஷாருக்கான் இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்க உள்ளதாகவும், இந்த படத்தில் அமிர்கான் கேமிரோ ரோல் பண்ண உள்ளதாகவும், மெகா பட்ஜெட் படமான இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியானது. இதனால் சிம்புவை அடுத்து இயக்க போவது யார், ஏ.ஆர்.முருகதாசின் எடுத்த படம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











