சிம்புவின் பத்து தல ஷுட்டிங் துவங்கியது...எங்கு நடக்குது தெரியுமா?
சென்னை : மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடித்து வந்த வெந்து தணிந்தது காடு படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. செப்டம்பர் 15 ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து டைரக்டர் ஓப்லி எம் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இது கன்னட படமான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் மட்டுமே மீதமிருந்த நிலையில் திடீரென ஷுட்டிங் நிறுத்தப்பட்டது.

தனது தந்தை டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால் பத்து தல படத்தின் வேலைகளை பாதியில் நிறுத்தினார் சிம்பு. டி.ராஜேந்தர் குணமானதை அடுத்து சமீபத்தில் தான் சிம்பு சென்னை திரும்பி உள்ளார். இதனையடுத்து சினிமா வேலைகளையும் துவக்கி உள்ளார்.
சிம்பு அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில் மற்ற நடிகர்கள் நடித்த சீன்களை எடுத்து வந்தார் டைரக்டர். தற்போது சிம்பு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இன்று முதல் பத்து தல படத்தின் வேலைகளை துவக்கி உள்ளார் சிம்பு.
லேட்டஸ்ட் தகவலின் படி, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள மைசூரு அரண்மனையில் இன்று ஷுட்டிங் துவங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதே இடத்தில் தான் லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் ஷுட்டிங்கும் நடக்கிறது. இதனால் பத்து தல , சந்திரமுகி 2 டீமிலும் உள்ள நடிகர் நடிகைகள் சந்தித்து கொள்வதற்கான வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பத்து தல படத்தில் சிம்பு, கேங்ஸ்டர் ரோலில் நடிப்பதால் அடர்ந்த தாடியுடன் காணப்படுகிறார். கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர் உள்ளிட்ட பலரும் பத்து தல படத்தில் நடித்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் பத்து தல படத்தின் மொத்த ஷுட்டிங் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பிறகு அடுத்து எந்த படத்தில் சிம்பு நடிக்க போகிறார் என தெரியவில்லை.
பத்து தல படத்தை தொடர்ந்து டைரக்டர் கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிப்பதாக சொல்லப்பட்டது. இது ஹீரோயினாக அதிதி ஷங்கர் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் படம் பற்றி இதுவரை எந்த அப்டேட்டும் அறிவிக்கப்படவில்லை. இதே போல் வேறு எந்த படத்தில் சிம்பு கமிட்டாகி இருக்கிறார் என்றும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











