பிரம்மாண்ட நிறுவனத்தின் அடுத்த மாஸ் படத்தில் சிம்பு...குஷியான ரசிகர்கள்

சென்னை : நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான படம் ஈஸ்வரன். இதன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிம்பு. தற்போது கோலிவுட்டின் பிஸியான நடிகர்களில் ஒருவராகி விட்டார் சிம்பு.

தற்போது சிம்பு நடித்து முடித்துள்ள மாநாடு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அக்டோபரில் தியேட்டரில் மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டு வருகிறார்.

வரிசையில் காத்திருக்கும் படங்கள்

வரிசையில் காத்திருக்கும் படங்கள்

இதற்கு அடுத்தபடியாக பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் கவுதம் மேனனுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நதிகளில் நீராடும் சூரியன் படத்தில் நடிக்க உள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் சிம்பு

ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் சிம்பு

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கிறாராம். விஜய்யை வைத்து பிகில் படத்தை எடுத்தது போன்று பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்க உள்ளனராம்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இது பற்றிய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை சிம்பு மற்றும் அர்ச்சனா கல்பாதி இடையே நடந்து வருகிறது. அனைத்தும் முடிவான பிறகு இந்த புதிய படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த தகவலால் சிம்பு ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

டைரக்டர் யார்

டைரக்டர் யார்

ஏற்கனவே கேவி ஆனந்த் இயக்கும் ஒரு படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதில் சிம்பு நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கேவி ஆனந்த்தின் திடீர் மறைவால், வேறு டைரக்டரை வைத்து அந்த படத்தை தற்போது இயக்க ஏஜிஎஸ் முடிவு செய்துள்ளதாம். டைரக்டர் யார் என்பது முடிவு செய்யப்பட்ட பிறகு படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X