»   »  'அரசுப் பள்ளிகளைக் காப்போம்' ... நல்ல முழக்கத்துடன் வரும் 'சிலேட்டு'!

'அரசுப் பள்ளிகளைக் காப்போம்' ... நல்ல முழக்கத்துடன் வரும் 'சிலேட்டு'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக் கூடம், ஆசிரியர்கள், மாணவர்களை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம் வெளியாகிறது. படத்துக்கு பொருத்தமாக ஒரு தலைப்பை வைத்திருக்கிறார்கள்... சிலேட்டு என்று.

வேலன் தியேட்டர் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் இந்தப் படத்தின் கதைக் களம், ஒரு மலை கிராமத்தில் மூடக்கூடிய நிலையில் உள்ள அரசு பள்ளி ஒன்றை அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் காப்பாற்ற போராடுவதுதான்.

Silettu, a movie for govt schools

பொது அறிவு இல்லாத கல்வியை விட கல்வியில்லாத பொது அறிவு ஆயிரம் மடங்கு சிறந்தது என்பதையும் வலியுறுத்தும் வலியுறுத்தும் வகையில் படம் அமைந்துள்ளதாம்.

"அரசு பள்ளியை காப்போம் அடிப்படை கல்வியை மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் தொடங்குகிறோம். பல முன்னணி நட்சத்திரங்களோடு, புதுமுக நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு ஊட்டி, கோத்தகிரி, கூடலூர், கோவை, புதுகோட்டை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது," என்கிறார் வேலன் தியேட்டர் சார்பாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஜி.எம்.சண்முகராஜ்.

நல்ல நோக்கம்.. வெல்லணும்!

English summary
Silettu is a new Tamil movie in making supports Govt schools and education.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil