For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மாயவிழி அழகி..கவர்ச்சி புயல்..சில்க் ஸ்மிதாவின் மறுபக்கம்!

  |

  சென்னை : மாயவிழி அழகி.. இந்தியாவின் மார்லின் மன்றோ.. தென்னாட்டு பேரழகி என அழகில் இன்னும் எத்தனை சொல் உள்ளதோ அனைத்துக்கும் பொருத்தமானவர் நடிகை சில்க் சுமிதா.

  1980 மற்றும் 90களில் திரையுலகத்தையே தனது அழகால் அழகிய ராட்சசியாக ஆட்டிப்படித்தவர் சில்க் சுமிதா. பெயருக்கு ஏற்றார் போல உடலில் பளபளப்பும், மினுமினுப்பும் இருந்தால் இளசுகளை வளைத்துப்போட்டு தூக்கத்தை கெடுத்தார்.

  இன்றைய 2கே கிஸ்ட்களும் தேடும் கிளுகிளுப்பு நாயகியாக திகழ்ந்த சில்க் ஸ்மிதா அதே நாளில்,1996ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மறைந்து 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் சில.

  “மறக்குமா நெஞ்சம்… மனசுல சலனம்”: நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் சில்க் ஸ்மிதாவின் 26வது நினைவு நாள் “மறக்குமா நெஞ்சம்… மனசுல சலனம்”: நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் சில்க் ஸ்மிதாவின் 26வது நினைவு நாள்

  உண்மையான பெயர்

  உண்மையான பெயர்

  விஜயலட்சுமி என இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா 1979ம் ஆண்டு வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சாராய வியாபாரியாக நடித்திருந்தார். இந்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் 'சில்க்' இதையடுத்தே அவர் ஒரே இரவில் சில்க் ஸ்மிதாவாக மாறினார். இயக்குனர் வினு சக்ரவர்த்தி அவருக்கு பெயர் வைத்தார்.

  450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்

  450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்

  80ம் ஆண்டு தென்னிந்தியாவில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான சில்க். பின்னாளில் குறுகிய காலத்தில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சினிமாவில் நுழைந்த 17 வருடத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் கொடி கொட்டி பறந்தார்.

  ஐட்டம் பாடலுக்கு டான்ஸ்

  ஐட்டம் பாடலுக்கு டான்ஸ்

  ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால் போன்ற தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்களுடன் பணியாற்றினார். தினமும் குறைந்த பட்சம் 3 ஷிப்டுகளை போட்டு காலை, மாலை,இரவு என பயங்கர பிசியாக இருந்த அவர், அப்போதே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்தாராம்.

  ஆங்கில ஆசை

  ஆங்கில ஆசை

  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சில்க் ஸ்மிதா பள்ளிப்படிப்பைக்கூடா முடிந்தது இல்லை. ஆனால், சினிமாவில் நுழைந்தபிறகு, தனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், வினுவின் மனைவியிடம் நடனம் மற்றும் ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொண்டு நாளடைவில் ஆங்கிலத்தில் சரளமாக பேசினார்.

  17வயதில் கொடுமை

  17வயதில் கொடுமை

  சில்க் ஸ்மிதாவுக்கு 17 வயதில் மாட்டு வண்டி ஓட்டுபவருடன் திருமணம் நடந்தது. அவருக்கு கடுமையான குடிப்பழக்கம் உண்டு. இதனால், தினமும் குடித்துவிட்டு வந்து சில்கை சித்ரவதை செய்துள்ளார். இதனால், மனம் வெறுத்த சில்க், வீட்டைவிட்டு வெளியேறி சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி வேலைத்தேடினார்.

  மது பழக்கம்

  மது பழக்கம்

  ஐட்டம் பாடலுக்கு ஆடி ஆடி சலிப்படைத்த சில்க், படம் தயாரிக்க தொடங்கினார். ஆனால் அவர் படத் தயாரிப்பில் ரூ.2 கோடி வரை நஷ்டத்தைச் சந்தித்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சில்க் குடி பழக்கத்துக்கு ஆளானார். மது அருந்திவிட்டு ரகளை செய்து சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.

  யாராலும் மறக்க முடியாது

  யாராலும் மறக்க முடியாது

  ஒரு புறம் பண நஷ்டம், மறுபுறம் காதல் தோல்வி என மனம் உடைந்த சில்க செப்டம்பர் 23, 1996 அன்று, தனது 35வது வயதில் குடியிருப்பில் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார். அவருடைய நற்கொலைக்கு என்ன காரணம் என இன்று வரை தெரியாமல் மர்மமாகவே உள்ளது. இவருடைய மறைவிற்குப் பிறகு தி டர்டி பிக்சர் என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. நடிகை சில்க் ஸ்மிதா தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழித் திரைப்பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டுச்சென்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

  Read more about: silk smitha death anniversary
  English summary
  Silk Smitha a famous name in the South film industry. Unknown Facts about the late actress Silk Smitha
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X