அதர்வாவுடன் ரொமான்ஸ் பண்ண ஆசை.. சில்லுனு ஒரு காதல் சீரியல் நடிகை தர்ஷினி உடன் சூப்பர் சாட்!
சென்னை: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் நடித்து வரும் சமீர் அகமது மற்றும் தர்ஷினி கெளடா அளித்த ரொமான்டிக் பேட்டி வைரலாகி வருகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் எபிசோடை எல்லாம் ஷூட் செய்து கொண்டிருந்த இந்த ரீல் ஜோடியை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சென்று எடுத்த செம ஃபன்னான ஜாலியான இந்த பேட்டியில் ஏகப்பட்ட ரகசியங்களை ரிவீல் செய்துள்ளார் தர்ஷினி.

தமிழே தெரியாத அவர், அழகாக தமிழ் காதல் பாடலை பாடி அசத்துவதும், காதல் பற்றிய தனது கருத்தையும் இந்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதே போல நடிகர் சமீரிடம் காதல் அனுபவங்கள் பற்றி கேட்டதற்கு மனுஷன் ரொம்பவே கூச்சப்பட்டு பேச, ஷூட்டிங்கிற்கு வரும் பெண்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லாமே இவரிடம் தான் செல்ஃபி எடுத்து செல்கின்றனர் என்றும் கோர்த்து விட்டார் தர்ஷினி.
தமிழில் எந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய உங்களுக்கு விருப்பம் என்கிற கேள்விக்கு பதிலளித்த தர்ஷினி, நடிகர் அதர்வாவுடன் ரொமான்ஸ் செய்ய ஆசைப்படுகிறேன் என தனது விருப்பத்தை கூறியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











