For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  “அப்டேட் கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க… இத அவரு தான் சொல்ல சொன்னார்”: பிரபலத்தை கோர்த்துவிட்ட சிம்பு

  |

  சென்னை: சிம்பு நடிப்பில் செப்டம்பர் 15ம் தேதி வெளியான வெந்து தணிந்தது காடு திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது.

  வெந்து தணிந்தது காடு திரையரங்குகளில் 50 நாட்கள் கடந்ததை சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கொண்டாடினர்.

  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்பு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நெல்சனுக்கு சிக்னல் கொடுத்த சிம்பு… ஜெயிலர் ரிசல்ட் ஃபர்ஸ்ட்… நெக்ஸ்ட் வேட்டை மன்னன் ரீ-ஸ்டார்ட்நெல்சனுக்கு சிக்னல் கொடுத்த சிம்பு… ஜெயிலர் ரிசல்ட் ஃபர்ஸ்ட்… நெக்ஸ்ட் வேட்டை மன்னன் ரீ-ஸ்டார்ட்

  வெந்து தணிந்தது காடு 50 நாட்கள்

  வெந்து தணிந்தது காடு 50 நாட்கள்

  மாநாடு மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் செப்டம்பர் 15ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. முத்துவீரன் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சிம்பு நடித்திருந்தார். சிம்புவுடன் சித்தி இத்னானி, ராதிகா, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரையரங்குகளில் 50 நாட்களை கடந்துள்ளது.

  கொண்டாடிய படக்குழு

  கொண்டாடிய படக்குழு

  வெந்து தணிந்தது காடு படத்துக்கு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்‌ஷன் கிடைத்தது. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வெந்து தணிந்தது காடு 50வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் சிம்பு, இயக்குநர் கௌதம் மேனன், ஐசரி கணேஷ், உதயநிதி, பாடலாசிரியர் தாமரை உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சிம்பு ரசிகர்கள் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

  ரசிகர்களிடம் சிம்பு வேண்டுகோள்

  ரசிகர்களிடம் சிம்பு வேண்டுகோள்

  மேடையில் பேசிய சிம்பு "இது கோலிவுட் சினிமாவின் பொற்காலம். சமீபத்தில் ரிலீஸான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. விக்ரம் தொடங்கி பொன்னியின் செல்வன், காந்தாரா, லவ் டுடே வரை எல்லா படங்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. இயக்குநர்கள் அனைவருக்கும் வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களின் அந்த கனவை நிறைவேற்ற கூடிய காலகட்டம் கோலிவுட்டில் நிலவி வருகிறது. மக்கள் வித விதமான திரைப்படங்களை ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள்" என்றார்.

  முதலில் பயந்தேன்

  முதலில் பயந்தேன்

  தொடர்ந்து பேசிய அவர், "வெந்து தணிந்தது காடு வழக்கமான ஹீரோயிசம் கொண்ட படம் இல்லை என்பதால் வெளியாகும் முன் பயத்தில் இருந்தேன். முத்துவாக நடிக்க ரொம்பவே மெனக்கெட்டேன். ஆனால், மக்கள் வித்தியாசமான கதைகளை ரசிக்க ஆரம்பித்துவிட்டதால் படத்தை வெற்றி பெற வைத்துவிட்டனர். அதேபோல், ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். படம் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே அப்டேட்ஸ் கேட்டு வருகிறீர்கள். உங்கள் ஆர்வம் புரிகிறது. ஆனால் தயாரிப்பாளரோ, இயக்குநரோ, ஹீரோவோ ஒரு படத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு நிறைய கஷ்டப்படுகிறார்கள். அதை புரிந்து கொள்ளாமல் தினமும் நீங்கள் அப்டேட் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தால். தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது" என பேசினார்.

  அவரு தான் சொல்ல சொன்னார்

  அவரு தான் சொல்ல சொன்னார்

  மேலும், "ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களின் முதல் வேலை. எனவே எங்களுக்கு அந்த ஸ்பேஸ் கொடுத்தால்தான் நல்ல திரைப்படங்கள் வரும். அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தலை மேல் தூக்கி வைப்பார்கள். ஆனால், நான் எனது ரசிகர்களை தலை மேல் தூக்கி வைக்க ஆசைப்படுகிறேன். அனைத்து படங்களுக்கும் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள். இதை பத்து தல பட இயக்குநர் கிருஷ்ணா தான் சொல்ல சொன்னார்" எனக் கூறினார் சிம்பு. அவரின் இந்த பேச்சு வைரலாகி வருவதோடு, சிம்புவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் சில ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  English summary
  Simbu's Vendhu Thanindhathu Kaadu has passed 50 days in theatres. The film crew including Simbu celebrated and enjoyed it. Speaking then, Simbu advised the fans not to bother the actors by asking for updates.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X