மீண்டும் அந்த ரிஸ்க்கை எடுக்கும் சிம்பு.. எல்லாம் அந்த நம்பிக்கை தான்.. பத்து தல அப்டேட்!
சென்னை: சூர்யாவின் சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு.
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களுக்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தார்.
இந்நிலையில், பத்து தல படத்துக்காக மீண்டும் தனது உடல் எடையை அதிகரித்து வருகிறார் சிம்பு என்கிற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடும் ட்ரோல்
வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் உடல் எடை அதிகமாகி சிம்பு நடித்த நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர். அந்த படத்தில் நடித்த யோகி பாபு மற்றும் சிம்புவை கம்பேர் செய்து யாரு ஹீரோ, யாரு காமெடியன்னே தெரியல என்றெல்லாம் எல்லைமீறி ட்ரோல் செய்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கடுமையாக உடற்பயிற்சி செய்து சூப்பர் ஸ்லிம்மாக மாறினார் சிம்பு.

மாநாடு மிரட்டல்
ஈஸ்வரன் படத்திலேயே சிம்பு ஸ்லிம் ஆனாலும், மாநாடு படம் தான் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் வெற்றியை கொடுத்தது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் லூப் கான்செப்ட்டில் வித்தியாசமாக வெளியான அந்த படத்திற்காக எப்படியெல்லாம் கடுமையாக உடற்பயிற்சி செய்து ஸ்லிம் ஆனேன் என வீடியோ எல்லாம் போட்டிருந்தார் சிம்பு. மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி சிம்புவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தன.

வெந்து தணிந்தது காடு
மாநாடு படத்தை விட வெந்து தணிந்தது காடு படத்திற்காக மேலும், தனது உடல் எடையை கணிசமாக குறைத்து நடித்திருந்தார் சிம்பு. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை எல்லாம் பார்த்து ரசிகர்கள் என்னடா இது 16 வயசு சிம்பு திரும்ப வந்துட்டாரே என மிரண்டு போயிருந்தனர். இந்நிலையில், அடுத்ததாக பத்து தல படத்திற்காக சிம்பு ரசிகர்கள் வெயிட்டிங்.

அப்பாவுக்காக
வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்தாக பத்து தல படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில், திடீரென நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அப்பாவுக்காக சினிமா ஷூட்டிங் எல்லாத்தையும் தூக்கிப் போட்டு விட்டு அமெரிக்கா பறந்து சென்று அங்கே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அப்பாவின் உடல் நலம் பூரணமாக குணமடைந்த நிலையில், மீண்டும் பத்து தல படப்பிடிப்புக்கு திரும்பி உள்ளார் சிம்பு.

பத்து தல படத்துக்காக
பத்து தல படத்துக்காக மீண்டும் தாடி வைத்து, உடல் எடையை அதிகரித்து வருகிறார் நடிகர் சிம்பு. இப்போ தான் கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை கணிசமாக குறைத்த நிலையில், மீண்டும் இப்படி உடல் எடை கூடிவிட்டால் வேறு ஏதும் சிக்கல் வருமா? என்கிற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். ஆனால், வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் இருந்த உடல் எடையையே குறைத்து விட்ட நிலையில், முயற்சி செய்தால் எதையும் செய்யலாம் என்கிற நம்பிக்கையில் தான் மீண்டும் உடல் எடையை அதிகரித்து வருகிறாராம் சிம்பு.

மஹா நாளை ரிலீஸ்
ஹன்சிகாவின் மாஹா படத்தில் அவருக்கு ஜோடியாக கேமியோ ரோலில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு. இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் ஜூலை 22ம் தேதியான நாளை வெளியாகிறது. மாநாடு படத்தைத் தொடர்ந்து தியேட்டரில் மஹா படம் சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். பத்து தல திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











