அடிதூள்...ரிப்பீட்டு...மீண்டும் இணையும் தனுஷ்கோடி – அப்துல் காலீக்...மாநாடு 2 ஆ?

சென்னை : மாநாடு படத்தை தொடர்ந்து மற்றொரு புதிய படத்தில் சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடிக்க போகிறார்களாம். இந்த படமும் ரசிகர்களுக்கு மற்றொரு ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ - வில்லன் என இருவருக்கும் சமஅளவு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் லூப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட த்ரில்லிங் படம். இந்த படம் நவம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. 25 வது நாளில் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த மாநாடு படம் விரைவில் 75 வது நாளை எட்ட உள்ளது.

மிரட்டிய மாநாடு

மிரட்டிய மாநாடு

பெரும்பாலும் தமிழ் சினிமாக்களில் ஹீரோ கேரக்டர்கள் மட்டுமே அதிக முக்கியத்துவம், அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு, ஹீரோ - வில்லன் இருவரும் இணைந்து மிரட்டிய படம் என்றால் அது மாநாடு தான். சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து கொடுத்தனர்.

மீண்டும் இணையும் கூட்டணி

மீண்டும் இணையும் கூட்டணி

இந்நிலையில் கோலிவுட்டில் லேட்டஸ்ட் தகவலாக, சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து மற்றொரு புதிய படத்தில் நடிக்க போகிறார்களாம். ஆனால் நேரடி தமிழ் படம் இல்லையாம். மலையாள ரீமேக் படமாம். மலையாளத்தில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிஸ்டின் ஸ்டீபன், 2019 ல் மலையாளத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான டிரைவிங் லைசென்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்ய போகிறாராம். இந்த படத்தில் தான் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க போகிறார்களாம்.

என்ன படம் தெரியுமா

என்ன படம் தெரியுமா

மலையாளத்தில் டிரைவிங் லைசென்ஸ் படத்தில் பிருத்விராஜ் சுகுமாறன் மற்றும் சுரஜ் வெஜராம்முண்டு லீட் ரோலில் நடித்திருந்தனர். இந்த ரோலில் சிம்பு - எஸ்.ஜே.சூர்யாவை வைத்து எடுக்க லிஸ்டின் ஸ்டீபன் திட்டமிட்டுள்ளாராம். சிம்பு நடித்த வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவிற்காக தான் வெயிட்டிங்கா

சிம்புவிற்காக தான் வெயிட்டிங்கா

இந்த படத்திற்கான அடுத்தடுத்த கட்டங்கள் முடிவு செய்யப்பட்ட பிறகு இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் புதிய படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால், டிரைவிங் லைசென்ஸ் படத்தின் ரீமேக் பணிகள், சிம்பு ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்த பிறகே துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X