»   »  திருட்டுக் கல்யாணத்துக்காக சிம்பு- ஆன்ட்ரியா பாடிய பாட்டு!

திருட்டுக் கல்யாணத்துக்காக சிம்பு- ஆன்ட்ரியா பாடிய பாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருட்டுக் கல்யாணம் என்ற படத்துக்காக சிம்புவும் ஆன்ட்ரியாவும் ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக சி வெங்கிடுபதி, எஸ் பாலசுப்ரமணியம், சசிபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படம் திருட்டுக்கல்யாணம்.

கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக தேஜஸ்வீ அறிமுகமாகிறார். மற்றும் ஆடுகளம் நரேன், பசங்க செந்தி, தம்பிராமையா, தேவதர்ஷினி இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் நடிக்கிறார்கள்.

ரத்னவேலுவின் உதவியாளர் கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்கிறார். வைத்தி இசையமைக்கிறார்.

பாக்யராஜ் உதவியாளர்

பாக்யராஜ் உதவியாளர்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் - ஷக்திவேலன் இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சசி போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

ஓடிப்போகும் கதை

ஓடிப்போகும் கதை

படம் பற்றி இயக்குனர் ஷக்திவேலனிடம் கேட்டோம்...

கல்லூரியில் படிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடி போய் தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கையை அனுபவிதார்களா இல்லையா என்பது கதை!

சிம்பு, ஆன்ட்ரியா பாட்டு

சிம்பு, ஆன்ட்ரியா பாட்டு

இந்தப் படத்தில் "ஆச மேல ஆச" என்ற பாடலை சிலம்பரசன் பாடி இருக்கிறார். இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகும். அடுத்ததாக ஆன்ட்ரியா பாடிய "சொர்க்கத்த..." என்ற பாடலும் மிகப் பெரிய ஹிட் ஆகும்.

பத்து வயசு பாடகி

பத்து வயசு பாடகி

அதே போல சன் டி.வி சூப்பர் சிங்கர் புகழ் ஆட்டம் பாம் ஐஸ்வர்யா பாடிய "சின்ன சின்ன" என்ற பாடலும் ஹிட் அடிக்கும். சுமார் பத்து வயதே ஆனா சின்னப் பெண் இவ்வளவு தெளிவாக பாடியதை பார்த்து அதிசயத்து விட்டோம்.

இடைவெளி

இடைவெளி

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்பாடு இடைவெளி தான் மிகப்பெரிய இன்னல்களுக்குக் காரணம் இதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறோம்," என்றார் இயக்குனர் ஷக்திவேலன்.

English summary
Actors Simbu and Andrea have crooned two songs in debutant Shankthi Velan's directorial venture Thiruttu Kalyanam.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil