என்னப்பா நடக்குது...சஸ்பென்சை எகிற வைக்கும் சிம்பு, அனிருத்...அப்படி என்ன சொல்ல போறாங்க?

சென்னை : சிம்புவும், அனிருத்தும் சஸ்பென்ஸ் வைத்து போட்டு வரும் ட்வீட்கள், என்ன சொல்ல போறாங்க என அனைவரையும் ஆர்வமாக கவனிக்க வைத்துள்ளது. இவர்களது ட்வீட்கள் ஒரு பக்கம் லைக்குகளை அள்ளி வந்தாலும், மற்றொரு பக்கம் இவர்கள் எப்போது அடுத்த ட்வீட் போடுவார்கள் என கவனிக்க வைத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு. மீண்டும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறது. கெளதம் மேனன் இயக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவா

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவா

இந்நிலையில் ஆட்டோ டிரைவர் கெட்அப்பில் சிம்பு, வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங்கில் நடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதைத் தொடர்ந்து சிம்புவும், அனிருத்தும், தமிழால் இணைவோம் #TamilConnects என ஒரே மாதிரி ட்வீட் செய்தனர். இதனால் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு ஆதரவாக மொழி பிரச்சனையில் குரல் கொடுக்கிறார்கள் என சொல்லப்பட்டது. தமிழ் மொழி விவகாரத்திற்கு தான் பேசுகிறார்கள் என்று பார்த்தால் சிம்பு மற்றொரு ட்வீட்டை போட்டுள்ளார்.

அப்படி என்னப்பா அப்டேட்

அப்படி என்னப்பா அப்டேட்

சிம்பு இன்று காலை, ஆட்டோ டிரைவர் கெட்அப்பில் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்து, உங்களுக்காக ஒரு புது அப்டேட். புது ஆரம்பம் என தமிழில் ட்வீட் போட்டார். அதோடு #தமிழால்_இணைவோம் #TamilConnects என்ற ஹேஷ்டேக்கையும் டேக் செய்திருந்தார். சிம்பும், அனிருத்தும் போட்டுள்ள இந்த ட்வீட்டை பார்த்து பலரும் குழம்பிப் போய், எதற்காக இப்படி ட்வீட் செய்துள்ளனர் என கேட்க துவங்கினர்.

என்ன நடக்குது ப்ரதர்ஸ்

என்ன நடக்குது ப்ரதர்ஸ்

ஆனால் டைரக்டர் வெங்கட் பிரபு ட்விட்டரிலேயே, சிம்பு, அனிருத் வந்தாங்க. ட்வீட் போட்டாங்க. டிரெண்ட் ஆனாங்க. ரிப்பீட்டு. என்ன நடக்குது ப்ரதர்ஸ்? என்ன இது #TamilConnects #தமிழால்_இணைவோம்? என கேட்டு விட்டார். இதற்கு பலரும் நாங்களும் இதை தான் சார் கேட்டுகிட்டு இருக்கோம். பலர் நினைத்துக் கொண்டிருந்ததை நீங்க ஓப்பனாவே கேட்டுடீங்க என கமெண்ட் செய்தனர்.

என்ன அனிருத் சொல்லிடலாமா

என்ன அனிருத் சொல்லிடலாமா

வெங்கட் பிரபுவின் ட்வீட்டையும் ரீட்வீட் செய்த சிம்பு, என்ன அனிருத் சொல்லிடலாமா என கேட்டிருந்தார். சிம்புவிற்கு ட்விட்டரிலேயே பதில் சொன்ன அனிருத், நாளைக்கு நல்ல நாள் தமிழ் புத்தாண்டு. அப்போ சொல்லிருவோம் என பதிவிட்டு, அதோடு #தமிழால்_இணைவோம் #TamilConnects ஹேஷ்டேக்கை டேக் செய்திருந்தார். #தமிழால்_இணைவோம் என வாசகத்துடன் தனது ஸ்டைலான போட்டோவையும் பதிவிட்டிருந்தார் அனிருத்.

நாளைக்கே சொல்வோம்

நாளைக்கே சொல்வோம்

இதற்கு சிம்புவும், அனிருத் அப்போ more updates நாளைக்கு 14.04.2022. தமிழால் இணைகிறோம் என பதிவிட்டு அதோடு #தமிழால்_இணைவோம் #TamilConnects ஹேஷ்டேக்கை டேக் செய்திருந்தார். #தமிழால்_இணைவோம் என வாசகத்துடன் தனது ஸ்டைலான போட்டோவையும் பதிவிட்டிருந்தார்.

பெரிய சம்பவமா இருக்குமோ

பெரிய சம்பவமா இருக்குமோ

அட என்ன இது ஒன்னுமே புரியலியே. இவங்க அப்படி என்ன சொல்ல வர்றாங்க. புது படம், மியூசிக் ஆல்பம் ஏதாவது ஒன்றிற்கான அறிவிப்பா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். சிம்புவும், அனிருத்தும் ஆஹா தமிழ் ஸ்ட்ரீமிங் ஆப்டோட பிராண்ட் அம்பாசிடர். அத தான் சொல்ல வாறாங்க. அப்போ ஏதோ ஒரு பெரிய சம்பவம் இருக்கும் போல. நார்மலா ஒரு அப்டேட் விடுங்கப்பா. இப்படியெல்லாம் பண்றத பார்த்தா சிரிப்பா இருக்கு என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X