»   »  சந்தானத்திற்காக ஆளே மாறிப் போன சிம்பு, அனிருத்

சந்தானத்திற்காக ஆளே மாறிப் போன சிம்பு, அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்திற்காக சிம்புவும், அனிருத்தும் ஆளே மாறியுள்ளனர்.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் காதலும், காமெடியும் கலந்த படம் சக்க போடு போடு ராஜா. இந்த படத்தின் மூலம் நடிகர் சிம்பு இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

Simbu, Anirudh switch roles for Santhanam

என் காட்பாதர் எனக்காக இசையமைப்பாளர் ஆகியுள்ளார் என சந்தானம் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.

சிம்பு கம்போஸ் பண்ண அனிருத் பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோவை சிம்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சந்தானத்திற்காக இசையமைப்பாளர் பாடகராகவும், நடிகர் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளனர்.

சிம்பு, அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Simbu and his good friend music director Anirudh have changed roles for Santhanam's upcoming movie Sakka Podu Podu Raja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil