twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்புவை தனக்கு போட்டியாக தனுஷ் பார்க்கவே இல்லை... அவரோட ரூட்டே வேற... STR கனவு பலிக்காது!

    |

    சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

    முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது

    அதில் பேசிய சிம்பு தான் இனிமேல் பழைய மாதிரி திரும்பி வருகிறேன் என ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்தார்.

    இதனால் கோலிவுட்டில் மீண்டும் சிம்பு - தனுஷ் என்ற போட்டி வருமா என்ற கேள்விக்கு வலைப்பேச்சு பிஸ்மி ஃபிலிமிபீட் யூடியூப் தளத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

     AK 62 அப்டேட் இன்னும் வராம இருக்க இதுதான் காரணம்... அஜித் இப்போ முடிவை மாத்திட்டார்! AK 62 அப்டேட் இன்னும் வராம இருக்க இதுதான் காரணம்... அஜித் இப்போ முடிவை மாத்திட்டார்!

    பத்து தல சிம்பு

    பத்து தல சிம்பு

    சிம்பு - கெளதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகியுள்ள பத்து தல படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணா இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் 30ம் தேதி வெளியாகிறது. முன்னதாக பத்து தல படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது சிம்பு ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு தனது கேரியர் குறித்து பேசியது வைரலானது.

    மீண்டும் சிம்பு - தனுஷ் போட்டி

    மீண்டும் சிம்பு - தனுஷ் போட்டி

    அதில், இனிமேல் என்னோட ஆட்டத்தை கண்டிப்பாக பார்ப்பீங்க. நான் பழைய மாதிரி திரும்பிவிட்டேன். இனி என் ரசிகர்கள் ஏசி ரூம்ல இருந்து கால் மேல கால் போட்டு எனது கம்பேக் எப்படி இருக்குதுன்னு மட்டும் பாருங்க என்றர். அதுமட்டும் இல்லாமல் இன்னும் ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்து பேசியிருந்தார். இதனால் மீண்டும் சிம்பு - தனுஷ் போட்டி சூடுபிடிக்கும் என ரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்தது.

    எதிரும் புதிருமான இருதுருவங்கள்

    எதிரும் புதிருமான இருதுருவங்கள்

    தனுஷின் ஆரம்ப காலங்களில் சிம்பு தான் அவரது போட்டியாக பார்க்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் தனுஷுக்கு முன்பே திரையுலகில் அறிமுகமாகிவிட்டார் சிம்பு. எனவே சிம்புவுக்கு சரியான போட்டியென்றால் அது தனுஷ் தான் என பேச்சு எழுந்தது. அதற்கு ஏற்றவாறு இருவரும் அடிக்கடி போட்டிப்போட்டுக் கொண்டு பேட்டி கொடுப்பதும், தங்களது படங்களில் பஞ்ச் வசனங்கள் வைப்பதுமாக வலம் வந்தனர். ரஜினி - கமல், விஜய் - அஜித், வரிசையில் சிம்பு - தனுஷ் என இருதுருவ போட்டி நிலவியது.

    வலைப்பேச்சு பிஸ்மி விளக்கம்

    வலைப்பேச்சு பிஸ்மி விளக்கம்

    இந்நிலையில், பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியதை வைத்து அது தனுஷுக்கான சவால் என சொல்லப்பட்டது. அதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி ஃபிலிமிபீட் யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி, சிம்பு இதுமாதிரி ஏற்கனவே பலமுறை பேசியுள்ளார். ஆனால், அவர் திரும்பவும் படப்பிடிப்புக்கு தாமதமாக செல்வதாக சர்ச்சைகள் வரதான் செய்தன. இன்னொருபக்கம் தனுஷ் சிம்புவை ஒரு போட்டியாகவே பார்க்கவே இல்லை. அவர் இப்போது அடுத்தக் கட்டத்துக்கு சென்றுவிட்டார் எனக் கூறியுள்ளார்.

    சர்ச்சையாகும் சிம்புவின் சம்பளம்

    சர்ச்சையாகும் சிம்புவின் சம்பளம்

    சிம்பு - தனுஷ் இருவருமே கமர்சியல் படங்களில் தான் நடிக்கின்றனர். ஆனால், தனுஷ் சில நேரங்களில் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வேற லெவலில் சென்றுவிட்டார். அதனால் மீண்டும் சிம்பு - தனுஷ் என்ற போட்டி வர வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் திடீரென இரண்டு படங்களை ஹிட் கொடுத்துவிட்டு சிம்பு 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். அதனால் அவரிடம் செல்ல தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள STR 48 படத்திற்கு சிம்புவுக்கு 25 கோடி தான் சம்பளம் எனவும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Simbu's Pathu Thala film is releasing on March 30. After this, he will act in STR 48 produced by Raajkamal films. in this situation, Simbu can never compete with Dhanush. Valaipechu Bismi opined that.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X