»   »  நானும் கமலும் ஒண்ணாஜி?- ஒப்பிட மறுத்த சிம்பு

நானும் கமலும் ஒண்ணாஜி?- ஒப்பிட மறுத்த சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் இன்னும் வந்தபாடில்லை. அந்தப் படத்தை இயக்கிய பாண்டிராஜோ, அதற்குப் பிறகு 2 படங்களை இயக்கிவிட்டார்.

இந்த வருத்தத்தை தான் பங்கேற்கும் விழாக்களிலெல்லாம் கொட்டித் தீர்க்கிறார். ஆனால் வழி பிறக்கும் வழியைக் காணோம்.

இன்று நடந்த தூங்கா வனம் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியிலும் இது நம்ம ஆளு பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை அவரால். ஆனால் இதனை ஒரு புலம்பலாக இல்லாமல், சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

Simbu denies to compare himself with Kamal

நிகழ்ச்சியில் மைக் தன் கைக்கு வந்ததும் இப்படிச் சொன்னார் பாண்டி:

"ஒருநாள் இது நம்ம ஆளு' படப்பிடிப்பின்போது சிம்பு வழக்கம்போல ரொம்ப லேட்டாக வந்தார். அவரிடம், என்ன ஜீ இப்படி லேட்டா வர்றீங்களே' என்று கேட்டேன். அப்போது, அவர் 'சின்ன வயசுல இருந்தே நடிக்கிறேனா, கொஞ்சம் போரடிக்குதுஜீ,' என்றார்.

"என்ன ஜீ, நீங்க இப்படி சொன்னீங்க, கமல் சாரையெல்லாம் என்ன சொல்வது. அவர் எத்தனை வருஷமா நடிச்சிட்டு இருக்கார்?" என்று கேட்டேன்.

அதற்கு அவர், "கமல் சாரோட என்னை ஒப்பிடாதீங்க. அவர் லெவல் வேற. அவர் மகா கலைஞன். அவருக்கு முன்னாடி நாமெல்லாம் ஒண்ணும் கிடையாது. தயவு செய்து அவரோடு என்னையெல்லாம் ஒப்பிடாதீங்க," என்றி அடக்கத்தோடு சொன்னார் சிம்பு."

-பாண்டிராஜ் இதைச் சொல்லி முடிக்க, வந்திருந்த பாண்டவர் அணி மற்றும் அதன் ஆதரவாளர் கமல் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு.

குறிப்பு: சிம்பு இருப்பது கமலின் ஆதரவை இழந்த சரத்குமார் - ராதாரவி அணியில்!

English summary
Director Pandiraj revealed that actor Simbu has refused to compare him with Kamal Hassan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil