»   »  மத்த ஹீரோக்கள் போன்று சிம்பு என்னை டார்ச்சர் செய்ய மாட்டார்: கவுதம் மேனன்

மத்த ஹீரோக்கள் போன்று சிம்பு என்னை டார்ச்சர் செய்ய மாட்டார்: கவுதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு முழுக் கதையையும் சொல்லுங்க என்று மத்த ஹீரோக்கள் மாதிரி என்னை டார்ச்சர் செய்ய மாட்டார். கொஞ்சம் சொன்னால் போதும் என இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

அச்சம் என்பது மடமையடா படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அப்போது படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் கூறுகையில்,

தாமதம்

தாமதம்

அச்சம் என்பது மடமையடா படம் தாமதமாக வெளியாகும் போதும் கூட மக்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பதற்கு காரணம் ரஹ்மான் சாருடைய இசை என்று நினைக்கிறேன்.

இசை வெளியீடு

இசை வெளியீடு

இந்த படத்திற்கு முறையாக இசை வெளியீட்டு விழா நடத்த முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. இன்று உங்கள் முன்பு பாடல்களை வெளியிடுகிறோம்.

சிம்பு

சிம்பு

சிம்பு எனக்கு அமோக ஆதரவு அளித்தார். அவர் என்னுடைய நல்ல நண்பர். சிம்புவுடன் பணியாற்றுவதில் எனக்கு ஒரு வசதி உள்ளது. சிம்பு முழுக் கதையையும் சொல்லுங்க என்று மத்த ஹீரோக்கள் மாதிரி என்னை டார்ச்சர் செய்ய மாட்டார். கொஞ்சம் சொன்னால் போதும்.

மாஸ்

மாஸ்

அச்சம் என்பது மடமையடாவில் கொஞ்சம் மாஸ் முயற்சி செய்துள்ளேன். ரஹ்மான் சாருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் மதன் கார்க்கியுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

மஞ்சிமா

மஞ்சிமா

மஞ்சிமாவை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். அவர் நம்ம வீட்டு பொண்ணு மாதிரி. நிச்சயம் கோலிவுட்டுல் நிலைப்பார். இந்த படத்திற்காக கஷ்டப்பட்டுள்ளார்.

English summary
AYM director Gautham Menon said that Simbu doesn't torture him like other heroes. Much delayed Acham Yenbadhu Madamaiyada will hit th screens on friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil