»   »  கண்டிஷனுடன் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன சிம்பு.. பெண்தேடும் படலம் தீவிரம்!

கண்டிஷனுடன் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன சிம்பு.. பெண்தேடும் படலம் தீவிரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிம்பு பெற்றோர் பார்க்கும் பெண்ணை மணமுடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அடுத்தடுத்து ஏற்பட்ட காதல் தோல்விகளால் தனது திருமணத்தை இதுநாள்வரை சிம்பு தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுவிட்டார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிலம்பரசன்

சிலம்பரசன்

தந்தை டி.ராஜேந்தரின் இயக்கத்தில் 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு. தொடர்ந்து 'வல்லவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் இயக்குனராகவும் மாறினார்.

நயன்தாரா

நயன்தாரா

இன்று தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக விளங்கும் நயன்தாரா - சிம்பு காதல் வல்லவன் படம் வந்த புதிதில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராதவிதமாக இருவரின் காதலும் முடிவுக்கு வந்தது. இடையில் ஏற்பட்ட பல்வேறு கசப்புகளைத் தாண்டி தற்போது இது நம்ம ஆளு படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர்.

ஹன்சிகா

ஹன்சிகா

வாலு படப்பிடிப்பின்போது 2 வது முறையாக காதலில் விழுந்தார் சிம்பு. ஹன்சிகாவை உருகி உருகி இவர் காதலித்த விவரம் வெளியில் தெரியவர ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம் என்று இருவரும் சேர்ந்தே பேட்டி அளித்தனர். பெயருக்கு ஏற்ற மாதிரி நீண்டுகொண்டே சென்ற இந்தப் படப்பிடிப்பு முடிவுக்கு வருவதற்குள் இருவரின் காதலும் முடிவுக்கு வந்தது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அடுத்தடுத்து 2 காதல்களும் முடிவுக்கு வந்த நிலையில் கொஞ்ச நாள் ஆன்மீக வாழ்க்கைக்கு தாவி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் இதுநாள்வரை காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் என்று கூறி வந்த சிம்பு தற்போது பெற்றோர் பார்க்கும் பெண்ணை மணமுடிக்க சம்மதம் சொல்லி விட்டாராம்.

விருந்தின்போது

விருந்தின்போது

சமீபத்தில் சிம்பு அவரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான குடும்ப நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு மதிய விருந்தில் சிம்புவின் திருமணம் பற்றி அனைவரும் பேசியுள்ளனர். முடிவில் திருமணம் செய்து கொள்ள சிம்பு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறுகின்றனர்.

சம்மதம் தான்

சம்மதம் தான்

திருமணத்திற்கு சம்மதம் சொன்னாலும் கூட தனது மனதிற்கு பிடித்திருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன், என்ற நிபந்தனையுடன் தான் அவர் சம்மதம் சொல்லியிருக்கிறாராம்.

தேடுதல் தீவிரம்

தேடுதல் தீவிரம்

தற்போது சிம்புவிற்கு தீவிரமாக பெண் தேடும் படலத்தில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அவரது திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Actor Simbu Now Agree to Arranged Marriage, the Official Marriage Announcement will be Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil