சிம்பு என்ட்ரி ஸ்பெஷல்.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுகிறார் தெரியுமா?

சென்னை: கமல்ஹாசன் இனி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என்றதும் ரசிகர்கள் அப்செட் ஆகினர்.

ஆனால், நடிகர் சிம்பு அந்த நிகழ்ச்சியை இந்த வாரம் முதல் தொகுத்து வழங்க போகிறார் என்பது தெரிந்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

புதிய ஹோஸ்ட் எப்படி இந்த போட்டியாளர்களை சமாளிக்கப் போகிறார் என்றும் சிம்பு முதல் வாரத்திலேயே யாரை எவிக்ட் செய்யப் போகிறார் என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

விடைபெற்ற கமல்

விடைபெற்ற கமல்

பிக் பாஸ் தமிழ் முதல் சீசன் முதல் 5வது சீசன் வரை தனக்கே உரிய பாணியில் சிங்கம் போல அந்த நிகழ்ச்சியை கமல் நடத்தி வந்தார். பிக் பாஸ் சீசன் 5ன் இறுதிக் கட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே ஒரு வாரம் மட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், கடந்த வாரம் இனி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தான் தொகுத்த வழங்கப் போவதில்லை என்றும் விக்ரம் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளேன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

ஸ்டைலிஷ் சிம்பு

ஸ்டைலிஷ் சிம்பு

கமல் இல்லை என்றதும் கடுப்பான ரசிகர்களை கவர சிம்புவை புதிய ஹோஸ்ட்டாக பிக் பாஸ் அல்டிமேட் டீம் கொண்டு வந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காத சிம்பு ரசிகர்களும், இனி சிம்புவுக்காக அந்த ஷோவை பார்ப்பார்கள். முதல் புரமோவிலேயே ஒயிட் அண்ட் ஒயிட்டில் செம ஸ்டைலிஷ்ஷாக சிம்பு கொடுத்த என்ட்ரி மிரட்டியது.

கடைசி இடம்

கடைசி இடம்

இந்த வாரம் அன் அஃபிஷியல் ஓட்டிங்கின் அடிப்படையில் கடைசி இடத்தில் தாடி பாலாஜி உள்ள நிலையில், அவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் எவிக்‌ஷன் என்ன ஆனது என்கிற ஹாட் அப்டேட் தற்போது கசிந்துள்ளது.

நோ எவிக்‌ஷன்

நோ எவிக்‌ஷன்

நடிகர் சிம்பு இந்த வாரம் பிக் பாஸ் ஹோஸ்ட்டாக ஷோவில் என்ட்ரி கொடுக்கவிருக்கும் நிலையில், யாருமே எவிக்ட் ஆக மாட்டார்கள் என்ற பேச்சுக்களும் சமூக வலைதளத்தில் அடிபட்டு வந்த நிலையில், தற்போது இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட்டில் நோ எவிக்‌ஷன் என்கிற ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது.

ஏற்கனவே வனிதா

ஏற்கனவே வனிதா

சிம்பு நிகழ்ச்சிக்கு வந்து யாரையும் எவிக்ட் செய்யக் கூடாது என்பதற்காகவே வனிதா விஜயகுமாரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே வெளியேற வைத்து விட்டாரகளா? என்கிற கேள்விகளையும் பிக் பாஸ் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். வனிதா வெளியேறியதால், மேலும், ஒருவரை ஏன் வெளியே அனுப்ப வேண்டும் என்பதால் எவிக்‌ஷனை தவிர்த்து இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

புது வரவு

புது வரவு

சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் இந்த வாரம் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்றும் கலக்கப்போவது யாரு சதீஷும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வரப்போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிம்புவின் மாஸ் என்ட்ரி எப்படி இருக்கப் போகிறது என்பதையும், இந்த வாரம் எவிக்‌ஷனே இல்லை என்றால் வேறு என்ன ஸ்பெஷல் இருக்கும் என்றும் ரசிகர்கள் நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X