அமெரிக்காவில் சிகிச்சை முடிந்தது.. இந்தியா திரும்பும் டி ராஜேந்தர்..வந்ததும் முதல் வேலை இதுதானாம்!

சென்னை : உடல்நலகுறைவால் சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்ற டி ராஜேந்தர் பூரண குண்டமடைந்து நாளை தாயகம் திரும்புகிறார்.

டி.ராஜேந்தர் என்கிற பெயரைக் கேட்டதும் சட்டென நம் நினைவுக்கு வருவது அடுக்காக அவர் பேசும் வசனம் தான்.

வாயிலேயே பீட் போடுவது, மேஜையை தட்டி தாளம் போடுவது, தனக்கே உரிய ஸ்டைலில் தலையை அசைத்து ஆடுவது டிஆரின் ஸ்பெஷல். இதனால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நபராக இருக்கிறார் டி ராஜேந்தர்.

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குநர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் டி.ராஜேந்தர். கடந்த மாதம் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அமெரிக்காவில் சிகிச்சை

அமெரிக்காவில் சிகிச்சை

இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தந்தையின் சிகிச்சைக்காக படப்பிடிப்பு பணிகளை நிறுத்திவிட்டு நடிகர் சிம்பு 10 நாட்களுக்கு முன்பே அமெரிக்கா சென்று சிகிச்சைக்கான பணிகனை கவனித்துக் கொண்டார். இதையடுத்து டி ராஜேந்தருக்கு சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தவுடன் சிம்பு சென்னை திரும்பினார். அப்போது, டி ராஜேந்தர் சிம்புவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.

நாளை சென்னை திரும்புகிறார்

நாளை சென்னை திரும்புகிறார்

சிகிச்சை முடிந்து சில நாட்களாக அமெரிக்காவில் ஓய்வில் இருந்த டி ராஜேந்தர் குடும்பத்தினருடன் நாளை அதிகாலை அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி ஆரின் மனைவி உஷா, இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோரும் நாளை நாடு திரும்புகின்றனர்.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

உடல் நலம் பெற்று உற்சாகம் மற்றும் துடிப்புடன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள், குடும்ப நண்பர்கள், கலையுலக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டி ஆர் நன்றியை தெரிவித்தார். மேலும், சென்னை வந்த பின் முதல் வேலையாக தனது சிகிச்சைக்காக உதவி செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X